/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிழல் பரப்பிய அரச மரக்கிளைகள் வெட்டப்பட்ட அவலம்!
/
நிழல் பரப்பிய அரச மரக்கிளைகள் வெட்டப்பட்ட அவலம்!
ADDED : செப் 11, 2025 06:49 AM

பல்லடம்; பல்லடம் அருகே, 60 ஆண்டு காலமாக நிழல் கொடுத்து வரும் இரண்டு அரச மரங்கள், கிளைகளை இழந்து பரிதாபமாக காட்சியளிப்பது, இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், 'மலையம்பாளையம் கிராமத்தில், 35 அடி உயரத்துக்கு மேல், இரண்டு அரச மரங்கள் வானளாவி வளர்ந்து நிழல் கொடுத்து வந்தன. பல அடி உயரத்துக்கு வளர்ந்து, மனிதர்களுக்கு நிழலையும், பல்வேறு ஜீவராசிகளுக்கு வாழ்விடமாகவும் இருந்த அரச மரங்களை, சிலர், தங்களது சுயநலத்தால், வெட்டி வீசியுள்ளனர். மின்வாரிய அதிகாரிகளும், இதற்கு ஒத்துழைப்பு தரும் வகையில் செயல்பட்டதையும் கண்டிக்கிறோம். கோர்ட் உத்தரவை மீறி, மரங்கள் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
இது குறித்து மின் வாரிய உதவி பொறியாளர் சரவணனிடம் கேட்டதற்கு, ''கவுண்டம்பாளையம்- மாதேஸ்வரன் நகர் வரை, மின் பராமரிப்பு பணி நடந்து வந்ததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. இந்த நேரத்தில், மரங்கள் வெட்டப்பட்டுள்ளன,'' என்றார்.
''அதே பகுதியைச் சேர்ந்தவர்கள்தான் மரங்களை வெட்டியுள்ளனர். இது குறித்து, தாசில்தாருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அவரது உத்தரவின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, கணபதிபாளையம் வி.ஏ.ஓ., ரமேஷ் கூறினார்.