/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இயன்றதை செய்பவரின் இதயத்தில் பிரகாசமாக திகழும் இறைவன்:0 ஆன்மிக விழாவில் பேச்சு
/
இயன்றதை செய்பவரின் இதயத்தில் பிரகாசமாக திகழும் இறைவன்:0 ஆன்மிக விழாவில் பேச்சு
இயன்றதை செய்பவரின் இதயத்தில் பிரகாசமாக திகழும் இறைவன்:0 ஆன்மிக விழாவில் பேச்சு
இயன்றதை செய்பவரின் இதயத்தில் பிரகாசமாக திகழும் இறைவன்:0 ஆன்மிக விழாவில் பேச்சு
ADDED : அக் 03, 2024 08:01 PM

உடுமலை:
உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், கார்த்திகை விழா மன்றம் சார்பில், நவராத்திரி இசை, இலக்கிய நாட்டிய கலை விழா நேற்று துவங்கியது.
உடுமலை கார்த்திகை விழா மன்றம் சார்பில், பிரசன்ன விநாயகர் கோவிலில், 61ம் ஆண்டு, நவராத்திரி இசை, இலக்கிய நாட்டிய கலை விழா நேற்று, காலை 7:00 மணிக்கு, ஸ்ரீ விசாலாட்சி அம்மனுக்கு விசேஷ அபிேஷக ஆராதனையுடன் துவங்கியது.
தொடர்ந்து, சமத்துார் சன்மார்க்க சங்க அன்பர்கள் சார்பில், அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடந்தது. கார்த்திகை விழா மன்ற கொடியை, உடுமலை மக்கள் பேரவை தலைவர் முத்துக்குமாரசாமி ஏற்றி வைத்தார்.
சன்மார்க்க கொடியேற்றி வைத்து, சமத்துார் சன்மார்க்க சங்கத்தலைவர் சிவராசு அய்யா பேசியதாவது:
எல்லா ஜீவன்களையும் இறைவன் படைத்தான்; ஆனால், மனிதனை மட்டும் இறைவன் விரும்பி படைத்தான்.
இறைவனின் பிரதிநிதியாக மனம் உடையவன் மனிதன். மனம் நீக்க பெரின் பிரகாசம் பெற்று தெய்வத்தன்மைக்கு உயருகிறான். வழிபாடு என்பது மனிதன் தன்னை உணர்தலே ஆகும்.
அடிபட்டு துடிக்கும் பறவையை கண்டு பதறும் நெஞ்சம் உடையவன் உள்ளத்தில், இறைவன் துளிர்க்கிறார். எவ்வளவு அறிவு, செல்வம், வீரம் உடையவனாக இருந்தாலும் பிறர் உதவியோடுதான் மனிதன் வாழ முடியும்.
தாய், தந்தை, நட்பு, குடும்பம் என உறவுகளில் உறவாடுதலே மனித வாழ்வாகும். தான் என்னும் அகங்காரம் இல்லாமல், தயவு மனோநிலையோடு பிறரை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், இறங்கி வந்து இயன்றதை செய்பவரின் இதயத்தில் இறைவன் பிரகாசமாக திகழ்கிறார். இவ்வாறு, அவர் பேசினார்.
இன்று, 4ம் தேதி மாலை, 6:30 மணிக்கு, 'கனவில் வந்த கடவுள்,' என்ற தலைப்பில், கவிஞர் சுந்தரம் பேசுகிறார். வரும், 5ம் தேதி மாலை 'உயிருக்கு ஏது ஊதியம்' என்ற தலைப்பில், இலக்கிய பேச்சாளர் தேவி பேசுகிறார்.

