/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெண்ணை தரக்குறைவாக பேசிய டிரைவர்; தனியார் பஸ்சை சிறைப்பிடித்து ஆவேசம்

ADDED : நவ 15, 2024 11:19 PM

அவிநாசி ; பெண்களை ஒருமையுடன் பேசியதால், அவிநாசியில் தனியார் பஸ்சை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
கோவையில் இருந்து திருப்பூருக்கு தனியார் பஸ் நேற்று முன்தினம் மாலை புறப்பட்டது. அவிநாசியை சேர்ந்த பெண்கள் இருவர் குழந்தைகளுடன் பஸ்சில் ஏறினர். அப்போது, வயதான பெண் ஒருவர் தட்டுத் தடுமாறி ஏறி, அவிநாசிக்கு டிக்கெட் கேட்டனர். டிரைவர் கனகராஜ், 'அவிநாசிக்கு பஸ் போகாது. பைபாஸில் போகிறது,' என்று சொல்லி, பெண்களை ஒருமையில் பேசி, திட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து, அவிநாசி - மடத்துப்பாளையத்தை சேர்ந்த கல்பனா என்ற பெண், தனது கணவர் மற்றும் நண்பர்களுக்கு போனில் தகவல் அளித்தார். அதனால், இரவு 7:40 மணிக்கு அவிநாசிக்கு வந்த பஸ்சை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். தகவலறிந்து வந்த இன்ஸ்பெக்டர்கள் முத்துமாரியம்மாள், முருகன் (போக்குவரத்து) ஆகியோர், டிரைவர் கனகராஜை விசாரித்தனர்.
புகார் உண்மை என தெரிந்ததும், டிரைவர் கனகராஜ் மீது வழக்குப்பதிவு செய்து, 1,500 ரூபாய் அபராதமும் விதித்தனர். இதுதவிர, டிரைவர் மீது வட்டார போக்குவரத்து ஆய்வாளர் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, பஸ்சை பொதுமக்கள் விடுவித்தனர்.