/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழில்நுட்ப ஜவுளி இயக்க கருத்தரங்கம்
/
தொழில்நுட்ப ஜவுளி இயக்க கருத்தரங்கம்
ADDED : நவ 27, 2025 02:23 AM
திருப்பூர்: தொழில்நுட்ப ஜவுளித்துறையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, தமிழக அரசு, தொழில் நுட்ப ஜவுளி இயக்கத்தை துவங்கியுள்ளது. இந்த இயக்கம், 2025 -26 முதல், 2030 - 31 வரையிலான ஐந்து ஆண் டுகள், மொத்தம் 15 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம், திருப்பூர் பப்பீஸ் விஸ்டா ஓட்டலில் நேற்று நடைபெற்றது. சர்வதேச ஆலோசகர்கள் பங்கேற்று, தொ ழில்நுட்ப ஜவுளித்துறையின் வளர்ச்சி, வாய்ப்புகள் குறித்து விளக்கி பேசினர்.
தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் திட்டத்தில், தொழில்நுட்ப ஜவுளி கட்டமைப்புகளை நிறுவும் தொழில்முனைவோருக்கு, தொழில் நுட்ப ஆலோசகர்களுக்கு வழங்கப்படும் கட்டணத்தில், 50 சதவீதம், அதிகபட்சமாக, 50 லட்சம் ரூபாய் வரை, மானியமாக வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது.

