/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிலத்தடி நீர் மேம்பாடு தொடர்பான ஆய்வு கூட்டம்
/
நிலத்தடி நீர் மேம்பாடு தொடர்பான ஆய்வு கூட்டம்
ADDED : நவ 30, 2024 04:35 AM
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மேம்படுத்தும் பொருட்டு, மழைநீரை குளம், குட்டை, பொதுக்கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் நீர்செறிவூட்டும் திட்டக்குழு ஆலோசனை கூட்டம் நடந்தது.
செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமை வகித்தார். கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள, 13 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள, 4,179.94 எக்டர் பரப்பளவில் உள்ள, 1,149 குளம், குட்டைகளின் நிலை, தண்ணீர் இருப்பு, மழைநீர் சேகரிப்பு மற்றும் ஓடை பராமரிப்பு, மாவட்டத்தில் உள்ள, 1,478 பொதுக்கிணறு மற்றும், 1,410 ஆழ்குழாய் கிணறுகளின் நிலை குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
காங்கயம் ஊராட்சி, பாலசமுத்திரம்புதுார், படியூர், சிவன்மலை, கீரணுார், மரவப்பாளையம், ஆலம்பாடி, பரஞ்சேர்வழி, மருதுறை, நத்தக்காடையூர் ஊராட்சி குளம், குட்டை நீர் செறிவூட்டுவது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, நான்காம் மண்டல தலைவர் பத்மநாபன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் நாகராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஜெயசீலன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் மோகன சுந்தரம், மோகனசுந்தரம் (குடிநீர் வடிகால் வாரியம்) முருகேசன் (பொதுப்பணித்துறை) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

