/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எம்பெருமானை போற்றி நடனமாடிய மாணவியர்!
/
எம்பெருமானை போற்றி நடனமாடிய மாணவியர்!
ADDED : மார் 09, 2024 07:58 AM

திருப்பூர் : மகா சிவராத்திரியை முன்னிட்டு, திருப்பூர் சாய் கிருஷ்ணா நுண்கலை கூட மாணவியர், இரவு முழுக்க கோவில்களில் சிவபெருமானை போற்றி பரத நாட்டியமாடினர்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு, எஸ்.கே.எஸ்.எப்.ஏ., அறக்கட்டளை மற்றும் சாய் கிருஷ்ணா நுண்கலைக் கூடம் சார்பில், கோவில்களில் இரவு முழுக்க நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
நேற்று, மாலை, 6:00 மணி முதல், அதிகாலை, 5:00 மணி வரை, பூச்சாக்காடு, ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், அன்னுார், ஸ்ரீ உஜ்ஜய்னி மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், ஆண்டிபாளையம் அகஸ்தீஸ்வரர் கோவில், இடுவம்பாளையம் அண்ணாமலையார் கோவில் ஆகிய கோவில்களில் நாட்டிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பல்வேறு ஊர்களில் எழுந்தருளியுள்ள சிவ பெருமானின் அவதாரங்கள், அதுகுறித்த குறிப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கி நடனம் அரங்கேற்றினர். சில கடினமான நளினங்களை, மிக சாதுர்யமாக ஆடி, பக்தர் களின் பாராட்டு பெற்றனர்.
நாட்டிய நிகழ்ச்சி குறித்து, சாய் கிருஷ்ணா நுண்கலைக் கூட துணை இயக்குனர் டாக்டர் சந்தியா சங்கர் கூறுகையில், ''நாட்டிய விழாவில், பங்கேற்ற மாணவியர், புதிய அனுபவம், தெம்பு பெற்றனர்; இதற்காக, கடந்த, 2 மாதமாக கடும் பயிற்சி மேற்கொண்டனர்.
மகா சிவராத்திரியன்று இளம் தலைமுறையினரை வைத்து நடத்தப்படும் இதுபோன்ற நிகழ்ச்சிகள், அவர்களுக்கு, நம் ஆன்மிக கலாசாரம், பண்பாடு ஆகியவற்றையும் அறிந்து கொள்ள முடிகிறது,'' என்றார்.

