/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவர்கள் ஆதார் புதுப்பித்தல் கோடை விடுமுறையில் வாய்ப்பு
/
மாணவர்கள் ஆதார் புதுப்பித்தல் கோடை விடுமுறையில் வாய்ப்பு
மாணவர்கள் ஆதார் புதுப்பித்தல் கோடை விடுமுறையில் வாய்ப்பு
மாணவர்கள் ஆதார் புதுப்பித்தல் கோடை விடுமுறையில் வாய்ப்பு
ADDED : மே 04, 2025 12:39 AM
திருப்பூர்: பள்ளியிலேயே ஆதார் பதிவு என்ற திட்டத்தின் கீழ் அனைத்து பள்ளிகளிலும், ஐந்து முதல், 17 வயது வரையுள்ள மாணவர்களுக்கு ஆதார் பதிவு மேற்கொள்ளுதல், கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் தற்போது பயின்று வரும் மாணவர்கள் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் மேற்கொள்ளாமல் இருந்தால், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம், கோடை விடுமுறை நாட்களில் மாணவர்கள் தங்கள் அருகில் அமைந்துள்ள, இ சேவை மையங்கள், தபால் நிலையங்கள், வட்டார வள மையங்களில் செயல்பட்டு வரும் சிறப்பு முகாம்கள் ஆகியவற்றில் ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தலை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தலைமை ஆசிரியர் இது குறித்து பெற்றோருக்கு அறிவுறுத்த வேண்டும்.
புதிதாக பள்ளியில் சேர்க்கை பெற்றுள்ள மாணவர்களிடமும் பள்ளியின் சேரும் போதே ஆதார் கட்டாய பயோமெட்ரிக் பணி நிறைவு செய்திருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் வங்கிக்கணக்கு துவங்குதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற பணிகள் காலதாமதமின்றி நடைபெறுவதை உறுதி செய்ய முடியும்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலமாக இத்தகவல் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

