/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாம்புக்கு ரூ.5 லட்சம் விலை; வனத்துறையிடம் சிக்கிய ஆசாமி
/
பாம்புக்கு ரூ.5 லட்சம் விலை; வனத்துறையிடம் சிக்கிய ஆசாமி
பாம்புக்கு ரூ.5 லட்சம் விலை; வனத்துறையிடம் சிக்கிய ஆசாமி
பாம்புக்கு ரூ.5 லட்சம் விலை; வனத்துறையிடம் சிக்கிய ஆசாமி
ADDED : டிச 25, 2025 05:47 AM

அவிநாசி: பாம்புக்கு, 5 லட்சம் ரூபாய் விலை பேசிய நபரை வனத்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி, ராயன் கோவிலை சேர்ந்தவர் விஜயகாந்த், 40, பாம்பு பிடிப்பதில் கைதேர்ந்தவர். பிடிக்கும் பாம்புகளை சட்ட விரோதமாக விற்பனை செய்கிறார் என்ற புகாரில், கோவை வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவினர், அவரை கண்காணித்தனர்.
பாம்பு வாங்குவோர் போல தொடர்பு கொண்டு, பாம்புடன், அவிநாசி - சேவூர் சாலை சிந்தாமணி அருகே வந்து, அதற்கான தொகையை பெற்று கொள்ளுமாறு அவரிடம் கூறினர்.
ஒரு பையில் நாக பாம்பை எடுத்து சென்ற போது, அங்கு தயாராக இருந்த, வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவினர், அவரை கையும், களவுமாக பிடித்தனர். பாம்புக்கு விலையாக, 5 லட்சம் ரூபாய் பேசியதாக கூறப்படுகிறது.
ஒச்சம்பாளையத்தில் அவரது தோட்டத்திற்கு சென்று வனத்துறையினர், அங்கு பாட்டிலில் அடைக்கப்பட்டு உயிருடன் இருந்த, மூன்று சாரை பாம்பு, தண்ணீர் பாம்பை பறிமுதல் செய்தனர்.