/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோடு ஆக்கிரமிப்பை ஆய்வு செய்ய கோரிக்கை
/
ரோடு ஆக்கிரமிப்பை ஆய்வு செய்ய கோரிக்கை
ADDED : டிச 20, 2024 07:18 PM
உடுமலை; குரல்குட்டையிலிருந்து மடத்துார் செல்லும் ரோடு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது குரல்குட்டை ஊராட்சி. இந்த ஊராட்சியில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
குரல்குட்டையிலிருந்து மடத்துார் செல்லும் ரோட்டோரத்தில் உள்ள குடியிருப்புகள் ரோட்டை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக, பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறுகின்றனர்.
ரோடு குறுகலாக இருப்பதால், இவ்வழிதடத்தில், பஸ்கள் செல்லும் போது, எதிரே வாகனங்கள் வர முடிவதில்லை. இதனால், மக்களுக்கு கடும் சிரமம் ஏற்படுகிறது.
குடியிருப்புகள் ரோட்டையொட்டி இருப்பதால், வாகனங்கள் வரும்போது, அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் ஒதுங்கி நிற்கவும் இடமில்லை. விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
போக்குவரத்து தொடர்ந்து பாதிக்கப்படுவதால், ரோடு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது குறித்து ஒன்றிய நிர்வாகம் ஆய்வு நடத்தி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

