/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மேம்பாலத்தின் கீழ் மழைநீர்; வாகன ஓட்டிகள் அவஸ்தை
/
மேம்பாலத்தின் கீழ் மழைநீர்; வாகன ஓட்டிகள் அவஸ்தை
ADDED : அக் 20, 2025 10:47 PM

திருப்பூர்: கோவை - ஈரோடு வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை ரோட்டில், பெருமாநல்லுார் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டது.
பெருமாநல்லுாரில் இருந்து குன்னத்துார் செல்லும் ரோட்டில் அமைந்துள்ள பைபாஸ் பாலத்தை சுற்றிலும் மேடான பகுதிகள் இருக்கின்றன. இதனால், சிறிய மழை பெய்தாலும், பாலத்தின் கீழ் மழைநீர் குளம் போல் தேங்கிவிடுகிறது.
கடந்த வாரம் பெய்த மழையால், மழைநீர் பாலத்தின் கீழ்தேங்கியுள்ளது. கான்கிரீட் தளம் அமைப்பதால், எளிதாக வடியாமல், நாட்கணக்கில் தேங்கி நிற்கிறது.
பொதுமக்கள் கூறுகையில், ''தேசிய நெடுஞ்சாலை பைபாஸ் ரோட்டில், மழைநீர் வடியாத அளவுக்கு பாலம் கட்டியுள்ளனர். சுற்றிலும் மேடான பகுதியாக இருப்பதால் மழைநீர் நீண்ட நாள் தேங்குகிறது. கால்வாய் வழியாக மழைநீரை கொண்டு சென்று, அருகே உள்ள ஓடையில் சேர்க்க திட்டமிட வேண்டும்.
ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் மக்கள் பாதிக்கப்படுன்றனர். பைபாஸ் பாலத்தை பயன்படுத்த முடியாமல், அருகே உள்ள மற்ற சிறு பாலங்களை பயன்படுத்தி, சுற்றி செல்ல வேண்டியுள்ளது. மழைநீர் தேங்காமல் இருக்க, நிரந்தரமாகநடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

