/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செக்கிங், அயர்னிங், பேக்கிங் தொழில் சவால்களை எதிர்கொள்ள ஆயத்தம்
/
செக்கிங், அயர்னிங், பேக்கிங் தொழில் சவால்களை எதிர்கொள்ள ஆயத்தம்
செக்கிங், அயர்னிங், பேக்கிங் தொழில் சவால்களை எதிர்கொள்ள ஆயத்தம்
செக்கிங், அயர்னிங், பேக்கிங் தொழில் சவால்களை எதிர்கொள்ள ஆயத்தம்
ADDED : டிச 18, 2024 11:12 PM

திருப்பூர்; செக்கிங், அயர்னிங், பேக்கிங் தொழிலில் ஏற்பட்டு வரும் புதிய பிரச்னைகளுக்கு ஒற்றுமையுடன் தீர்வு காண உரிமையாளர் நலச்சங்கம் தீர்மானித்துள்ளது.
திருப்பூரில் 500க்கும் மேற்பட்ட செக்கிங், அயர்னிங், பேக்கிங் நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்கள், உள்நாட்டு, ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களிடம் ஜாப் ஒர்க் பெற்று, ஆடைகளில் செக்கிங், அயர்னிங், பேக்கிங் செய்துகொடுக்கின்றன.
மொத்தம் 144 நிறுவனங்களை உறுப்பினர்களாக கொண்டு, திருப்பூர் மாவட்ட செக்கிங், அயர்னிங், பேக்கிங் உரிமையாளர்கள் நலச்சங்கம் செயல்பட்டுவருகிறது. மாவட்டத்திலுள்ள அனைத்து செக்கிங், அயர்னிங் நிறுவனங்களையும் கண்டறிந்து, உறுப்பினராக இணைத்து இச்சங்கம் முடிவு செய்துள்ளது.
செக்கிங், அயர்னிங், பேக்கிங் சங்க நிர்வாக குழு கூட்டம், போயம்பாளையத்தில், நடந்தது. சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் சுரேஷ், பொருளாளர் குமார், துணை தலைவர் சசிதரன், துணை செயலாளர் சந்திரசேகர் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
உறுப்பினர் பலம்
அதிகரிக்க திட்டம்
செக்கிங், அயர்னிங், பேக்கிங் சங்கத்தில் உறுப்பினராக உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும், அடுத்த ஒரு மாதத்துக்குள் உறுப்பினர் சான்று வழங்கப்படும். மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட செக்கிங், அயர்னிங், பேக்கிங், ஸ்டெயின் ரிமூவிங் நிறுவனங்கள் உள்ளன. அனைத்து நிறுவனங்களையும் சங்கத்தின் புதிய உறுப்பினராக இணைக்கவேண்டும்.
பிரச்னைகளை கடந்து, குறு, சிறு நிலையில் உள்ள செக்கிங், அயர்னிங், பேக்கிங் நிறுவனங்கள் நீடித்து நிலைத்திருப்பது பெரும் சவாலாக உள்ளது. மின்கட்டணம் 35 சதவீதம் உயர்வு; கட்டட வாடகை இரு மடங்கு உயர்வு; தொழிலாளர் சம்பளம் உயர்வு என புதுப்புது பிரச்னைகள் சூழ்ந்துள்ளன. ஒற்றுமையுடன் போராடி, தொழில் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணவேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
---
திருப்பூர் மாவட்ட செக்கிங், அயர்னிங், பேக்கிங் உரிமையாளர் நலச்சங்க நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது. சங்க தலைவர் முன்னிலையில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.

