/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கருமாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா
/
கருமாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா
ADDED : மார் 07, 2024 04:25 AM

திருப்பூர், : சிறுபூலுவபட்டி, திருவாவினன்குடி நகர் கருமாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடந்தது.
திருவாவினன்குடி நகர் ஆனந்த விநாயகர், கருமாரியம்மன், கருப்பராயன் கோவிலில், 18வது ஆண்டு பால்குட மற்றும் பொங்கல் திருவிழா, 5ம் தேதி துவங்கியது. மூகாம்பிகா நகர் ஸ்ரீதுர்கா விநாயகர் கோவிலிலிருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர்.
தொடர்ந்து மூன்று தெய்வங்களுக்கும் பாலாபிேஷகம், சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை ஆகியன நடந்தது. நேற்று காலை மாவிளக்கு ஊர்வலம் நடந்தது.
தொடர்ந்து, கருமாரியம்மன் கோவிலில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த திரளான பெண்கள் கலந்து கொண்டு, பொங்கல் வைத்து வழிபட்டனர்.
இன்று திருவிழா நிறைவாக, சிறப்பு பூஜைகளும், மஞ்சள் நீராட்டும் நடக்கிறது.

