/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உழவர் சந்தையில் நெகிழிக்கழிவுகள் அகற்றம்
/
உழவர் சந்தையில் நெகிழிக்கழிவுகள் அகற்றம்
ADDED : ஆக 24, 2025 07:02 AM

மாசுக்கட்டுப்பாடு வாரியம், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு-2 திட்ட மாணவர்கள் இணைந்து, திருப்பூர் வடக்கு உழவர் சந்தை அருகே, பாலிதீன் அகற்றும் பணி மேற்கொண்டனர்.என்.எஸ்.எஸ்., அலகு - 2, ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், முன்னிலை வகித்தார். மாசுக்கட்டுப்பாடு வாரிய உதவி பொறியாளர் திப்பு சுல்தான், சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், ''ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பாலிதீன் கவர் உள்ளிட்ட பொருட்கள், சுற்றுச்சூழலை சீரழிக்கிறது. மண்ணில் மட்கும் அவை, பறவை, விலங்கினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறது.
நெகிழியை எரியூட்டுவதால், காற்றுமாசு ஏற்படுகிறது. எனவே, நெகிழிப்பை பயன்பாட்டை தவிர்த்து, துணிப்பை பயன்படுத்த வேண்டும்'' என்றார்.25 கிலோ நெகிழிக் கழிவுகள் அகற்றப்பட்டன. இதில், மாசுக்கட்டுபாட்டு வாரிய உதவி பொறியாளர் சங்கர நாராயணன், அலுவலர் காந்திமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.