/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அகற்றப்படாத சாக்கடை அவதிப்படும் மக்கள்
/
அகற்றப்படாத சாக்கடை அவதிப்படும் மக்கள்
ADDED : ஆக 24, 2025 06:30 AM

திருப்பூர் திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, கார்த்திக் நகர் பகுதியில் தேங்கும் சாக்கடைக் கழிவுகளால் அப்பகுதி மக்கள் பெரிதளவு பாதிக்கப்படுகின்றனர்.
அப்பகுதி கடை உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது:
கடைக்கு முன்னால் சேகரமாகும் சாக்கடைக் கழிவுகளால் சிரமப்படுகிறோம். ஒன்றரை மாதமாக கழிவு அகற்றப்படாமல் இப்படியேதான் உள்ளது. இதற்கு முன், இங்கு ஒரு அடி அகலத்தில் சாக்கடைக் கால்வாய் இருந்தது. பெரிதாக்குவதாகக் கூறி குழி தோண்டினர்; தோண்டியதோடு சரி. இன்னும் பணி துவங்கவில்லை.
பல முறை கவுன்சிலரிடம் கூறிவிட்டோம். காலம் தாழ்த்திக்கொண்டே செல்கின்றனர். அருகிலுள்ள அனைத்து வீடுகளிலிருந்தும் வருகின்ற கழிவுநீர் இங்கு தான் சேகரமாகிறது. எப்போதும் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. கடையில் வியாபாரம் கூட செய்ய முடியவில்லை.
துர்நாற்றத்தால் மக்கள் முன்னர் போல், கடைக்கும் வருவதில்லை. வியாபாரம் பாதிக்கப்படுகிறது. இதிலிருந்து உற்பத்தியாகும் கொசுக்களால் நாங்களும் அருகிலுள்ள குடும்பங்களும் சிரமப்படுகிறோம்.
சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால், போராடுவதை தவிர வேறு வழியில்லை, என்றனர்.