ADDED : டிச 13, 2025 07:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை புது பஸ் ஸ்டாண்டில், போதிய இருக்கைகள் அமைக்கப்படாததால், பஸ்சுக்காக பயணியர் நீண்ட நேரம் நிற்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. தற்போது கூடுதலாக செயல்படும் புது பஸ் ஸ்டாண்டில், பழநி நோக்கி செல்லும், புறநகர் பஸ்கள், கிழக்கு பகுதியில் உள்ள மடத்துக்குளம், கணியூர், கொழுமம் கிராமங்களுக்கு செல்லும் டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தினமும், இங்கு நுாற்றுக்கணக்கான பயணியர் வருகை தருகின்றனர். ஆனால், அவர்களுக்கு தேவையான இருக்கைகள் அமைக்கப்படவில்லை. இதனால், பஸ்கள் வரும் வரை, நீண்ட நேரம் திறந்தவெளியில் வெயிலிலும், மழையிலும் பயணியர் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே, நகராட்சி அதிகாரிகள் கூடுதல் இருக்கைகள் அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

