/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அங்கன்வாடி மைய கட்டடத்தை புதுப்பிக்க பெற்றோர் கோரிக்கை
/
அங்கன்வாடி மைய கட்டடத்தை புதுப்பிக்க பெற்றோர் கோரிக்கை
அங்கன்வாடி மைய கட்டடத்தை புதுப்பிக்க பெற்றோர் கோரிக்கை
அங்கன்வாடி மைய கட்டடத்தை புதுப்பிக்க பெற்றோர் கோரிக்கை
ADDED : நவ 15, 2024 09:33 PM

உடுமலை; குறிச்சிக்கோட்டை அங்கன்வாடி மைய கட்டமைப்பை புதுப்பிக்க வேண்டுமென, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை ஒன்றியம், குறிச்சிக்கோட்டை அங்கன்வாடி மையத்தில், 20 குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர். இம்மையத்தின் கட்டமைப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேற்கூரைகள் சிதிலமடைந்தும், தரைதளம் முழுவதும் பெயர்ந்தும் உள்ளது. மையத்தின் சுற்றுச்சுவரும் பின்புறம் முழுவதும் இடிந்துள்ளது. இதனால் குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது.
மேலும், பின்புறம் திறந்தவெளிக் கழிப்பிடமாகவும் மாறி வருகிறது. தெருநாய்கள் மைய வளாகத்திற்குள் வந்து விடுவதும், குப்பைக்கழிவுகள் கொட்டுவதும், சுகாதார பிரச்னையும் ஏற்படுகிறது.
மையத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாததால், பெற்றோர் அதிருப்தியில் உள்ளனர். அங்கன்வாடி மையத்தை புதுப்பித்து, குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டுமென, பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

