sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குறை இல்லை; குற்றம் சொல்ல வழி இல்லை :வரைவு வாக்காளர் பட்டியல் 'நேர்த்தி'

/

குறை இல்லை; குற்றம் சொல்ல வழி இல்லை :வரைவு வாக்காளர் பட்டியல் 'நேர்த்தி'

குறை இல்லை; குற்றம் சொல்ல வழி இல்லை :வரைவு வாக்காளர் பட்டியல் 'நேர்த்தி'

குறை இல்லை; குற்றம் சொல்ல வழி இல்லை :வரைவு வாக்காளர் பட்டியல் 'நேர்த்தி'


ADDED : டிச 22, 2025 05:06 AM

Google News

ADDED : டிச 22, 2025 05:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: எஸ்.ஐ.ஆர். பணிகள் கச்சிதமாக முடிக்கப்பட்டு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளுக்கான வாக்காளர் வரைவு பட்டியல் நேர்த்தியாக தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. இதனால், தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மத்தியில், பெரிதாக புகார்கள் எழவில்லை.

தமிழகம் முழுவதும் எஸ்.ஐ.ஆர். என்படும் தீவிர திருத்தம் முடிக்கப்பட்டு, கடந்த 19ல் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. இறந்தோர், முகவரியில் இல்லாதோர், இரட்டை பதிவு வாக்காளர் என, 234 சட்டசபை தொகுதிகளில், மொத்தம் 97 லட்சத்து 38 ஆயிரம் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், 24 லட்சத்து, 44 ஆயிரத்து 929 பேரின் பெயர்கள், பட்டியலில் இடம்பெற்றிருந்தன. தீவிர திருத்தத்தில், 5 லட்சத்து 63 ஆயிரத்து 785 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. 9 லட்சத்து, 10 ஆயிரத்து 83 ஆண்; 9 லட்சத்து 70 ஆயிரத்து 817 பெண்; திருநங்கை 244 பேர் என, மொத்தம் 18 லட்சத்து 81 ஆயிரத்து 144 பேர், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

எதிர்ப்புக்குரல்கள்

எஸ்.ஐ.ஆர். வாயிலாக தகுதியான வாக்காளர் ஏராளமானோர் நீக்கப்படுவர்; கால அவகாசம் போதாது என்றெல்லாம், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு குரல்கள் எழுப்பினர்.

தீவிர திருத்தத்தில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.,) மற்றும் ஓட்டுச்சாவடி முகவர்கள் (பி.எல்.ஏ.,) வாயிலாக, இறந்தவர்கள், இரட்டை பதிவு, நிரந்தரமாக இடம்பெயர்ந்தோர் விவரங்கள் முழுமையான சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட்டே, பெயர் நீக்கங்கள் செய்யப்பட்டுள்ளன.

எதிர்பார்த்தது நடந்தது

பல்லடம், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு ஆகிய மூன்று தொகுதிகளிலும், வெளி மாவட்டங்களை சேர்ந்த இடம் பெயர்ந்த தொழிலாளர் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இவர்களில் பலர், சொந்த ஊர் ஓட்டுக்கு முக்கியத்துவம் அளித்து, திருப்பூரில் படிவம் பூர்த்தி செய்து கொடுக்கவில்லை. வெவ்வேறு காலகட்டங்களில், திருப்பூரிலிருந்து நிரந்தரமாக சொந்த ஊருக்கு சென்றவர்கள்; இறந்தும், வாக்காளர் பட்டியலில் வாழ்ந்துவந்தோர், இப்போது நீக்கப்பட்டுள்ளனர்.

இம்மூன்று தொகுதிகளிலும், அதிக எண்ணிக்கையிலான பெயர்கள் நீக்கப்படும் என்பது அனைவரும் எதிர்பார்த்ததுதான்; எஸ்.ஐ.ஆர். முடிவிலும் அதுவேதான் பிரதிபலித்திருக்கிறது. மாவட்டத்தின் எட்டு தொகுதிகளில் நீக்கப்பட்டுள்ளோரில், 55 சதவீதம் பேர், இம்மூன்று தொகுதிகளில் பட்டியலில் இருந்தவர்கள்.

செம்மையாக தயாரானது

கணக்கீட்டு படிவம் பூர்த்தி செய்து வழங்கிய, தகுதியான வாக்காளர்கள் விடுபடாமலும்; தகுதியற்றோர் பெயர்களை நீக்கம் செய்தும், செம்மையான முறையிலே வரைவு வாக்காளர் பட்டியல் தயாராகியிருப்பது தெரியவருகிறது. சில குளறுபடிகள் இருக்கலாமே தவிர, தகுதியானோர் அதிக எண்ணிக்கையில் நீக்கப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை என்பது தெளிவாகிறது.

மாயமானது எதிர்ப்புக்குரல்

வரைவு பட்டியல் வெளியானபின், அரசியல் கட்சியினர் மத்தியில் எவ்வித எதிர்ப்பு குரலும் எழவில்லை. தி.மு.க. - கம்யூ. கட்சியினரும்கூட, வரைவு பட்டியலை குறை சொல்லவில்லை.

ஆனாலும், தேர்தல் பிரிவிலிருந்து இப்போதுதான், பெயர் நீக்கப்பட்டோர் பட்டியல் அரசியல் கட்சியினருக்கு அனுப்பப்பட்டுவருகிறது. ஓட்டுச்சாவடி வாரியாக பட்டியலை ஆய்வு செய்து, அடுத்த ஓரிரு நாட்களில் கட்சியினர், வரைவு பட்டியல் தொடர்பான நிறை, குறைகளை தெரிவிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

தகுதி இருந்தும் பெயர் நீக்கமா? மீண்டும் பட்டியலில் சேரலாம் தேர்தல் கமிஷனின் அறிவுறுத்தியபடி, எந்த ஒரு தகுதியான வாக்காளரின் பெயரும் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படக்கூடாது என்பதில் முழு கவனம் செலுத்தி, எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குறை சொல்ல முடியாதவகையில், நேர்த்தியாகவே வரைவு பட்டியல் தயாரித்து, வெளியிடப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடி வாரியாக, வரைவு பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர் முழு விவரம் தனியாகவும்; நீக்கப்பட்டுள்ளோர் விவர பட்டியல் தனியாகவும் தயாரிக்கப்பட்டு, அரசியல் கட்சியினருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் நீக்கப்பட்டுள்ளோர் யார்; குறிப்பிட்ட பெயர், இறப்பு, இரட்டைப்பதிவு, இடம் பெயர்தல் என என்ன காரணத்துக்காக நீக்கப்பட்டுள்ளது என்கிற விவரங்களெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளன. வாக்காளர்களும், அரசியல் கட்சினர் சுலபமாக பெயர் நீக்கம் செய்யப்பட்டோர் விவரங்களை கண்டறிந்து, முரண்பாடுகள் இருப்பின், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். தகுதி இருந்தும் பெயர் நீக்கப்பட்டிருப்பின், படிவம் 6 பூர்த்தி செய்து கொடுத்து, பட்டியலில் சேரலாம். - தேர்தல் பிரிவு அலுவலர்கள்.








      Dinamalar
      Follow us