/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
என்.சி.சி. எழுச்சி தினத்தில் நடப்பட்ட மரக்கன்றுகள்
/
என்.சி.சி. எழுச்சி தினத்தில் நடப்பட்ட மரக்கன்றுகள்
என்.சி.சி. எழுச்சி தினத்தில் நடப்பட்ட மரக்கன்றுகள்
என்.சி.சி. எழுச்சி தினத்தில் நடப்பட்ட மரக்கன்றுகள்
ADDED : டிச 01, 2025 05:48 AM

பல்லடம்: ஆண்டுதோறும், நவ. 23 அன்று, என்.சி.சி., எனப்படும் தேசிய மாணவர் படையின் எழுச்சி தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பல்லடம் அடுத்த, இச்சிப்பட்டி கிராமத்தில், மரக்கன்று நடும் விழா நடந்தது.
கோவை, என்.சி.சி. 4ம் தமிழ்நாடு பட்டாலியன் மேஜர் ஜேம்ஸ்வின் ஜான்சன் தலைமை வகித்தார். பல்லடத்தம்மன் கோவில் செயல் அலுவலர் பவானி, கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லுாரி முதல்வர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பல்லடத்தம்மன் கோவில் நிலத்தில், என்.சி.சி. மாணவர்கள், ஊர் பொதுமக்கள் இணைந்து மரக்கன்றுகளை நட்டனர். கலங்கள் கிரீன் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர்கள் பிரபு, பாபு, மகிழ்வனம் பூங்கா பொருளாளர் பூபதி, பல்லடத்தம்மன் பூங்கா பொறுப்பாளர் சின்னசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.