ADDED : டிச 19, 2025 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாநகராட்சி குப்பைகளை, சின்ன காளிபாளையத்தில் கொட்டி வந்த, தி.மு.க., அரசை எதிர்த்து, ஒரு மாதமாக மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். நேற்று போராட்டத்தில் பங்கேற்க வந்த, பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகளை, தி.மு.க., அரசு கைது செய்திருப்பது, அதன் பாசிச போக்கை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
அறவழியில் போராட முயன்ற தலைவர்களை, சர்வாதிகார முறையில் அடக்கி, ஒடுக்க முனையும் தி.மு.க., அரசுக்கு, குப்பையை முறையாக அப்புறப்படுத்த திராணியில்லையா; மனமில்லையா?
- நயினார் நாகேந்திரன் தமிழக பா.ஜ., தலைவர்

