/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மோகன் கந்தசாமி நினைவேந்தல் நிகழ்ச்சி
/
மோகன் கந்தசாமி நினைவேந்தல் நிகழ்ச்சி
ADDED : நவ 08, 2025 01:00 AM

திருப்பூர்: மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., மோகன் கந்தசாமி நினைவு நாளில் பல்வேறு அமைப்பு மற்றும் கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
திருப்பூர் கிட்ஸ் கிளப் கல்வி குழுமத்தின் தலைவர் மோகன் கார்த்திக்கின் தந்தை மோகன் கந்தசாமி. பொங்கலுார் தொகுதி எம்.எல்.ஏ.,வாக பதவி வகித்தவர். திருப்பூர் 'சைமா' சங்கத்தின் தலைவராக, 40 ஆண்டு பணியாற்றியவர்.
அவரது 17வது ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.இதனையடுத்து, திருப்பூர் மாநகராட்சி அலுவலக சந்திப்பு பகுதியில் அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு மரியாதை ெசலுத்தப்பட்டது.
மோகன் கார்த்திக் முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ,க்கள் செல்வராஜ் (தி.மு.க.) விஜயகுமார், ஆனந்தன் (அ.தி.மு.க.) மேயர் தினேஷ்குமார், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க நிறுவன தலைவர் சக்திவேல், சங்க தலைவர் சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
மேலும், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், பாப்பீஸ் சிவகுமார், அகில் ரத்தினசாமி, எம்பரர் பொன்னுசாமி, கீதாஞ்சலி கோவிந்தப்பன், ஏ.டி.பி. நிர்வாகி கண்ணபிரான், எச்.எம்.எஸ். ராஜாமணி, சுப்ரீம் பேரடைஸ் ராதாகிருஷ்ணன், கவுன்சிலர்கள் செழியன், சாந்தாமணி, முன்னாள் கவுன்சிலர் ஆனந்தன், இருகூர் சுப்ரமணியன், முத்துராமலிங்கம், தி.மு.க. இளைஞர் அணி ராஜ் உட்பட பல்வேறு கட்சி மற்றும் அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

