ADDED : செப் 07, 2025 07:26 AM
திருப்பூர் : திருப்பூரில் நபிகள் புகழ்பாடும் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமிய சிறுவர்கள் கலந்து கொண்டனர்.
நபிகள் புகழ்பாடும் பேரணியும், அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வாழ சிறப்பு பிரார்த்தனையும் செய்து, சிறுவர்கள் சமாதான புறா பறக்கவிட்டனர்.
ஊர்வலத்தை, ஜமாத்துல் உலாமா அமைப்பின் மாவட்ட செயலாளர் அபுல் காசிம் தலைமையில், பாகவி ஹஜ்ரத் நாட்டுமக்கள் ஒற்றுமையுடன் வாழ சிறப்பு பிரார்த்தனை செய்து, தொழில் அதிபர் அஜீம், கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
பெரிய பள்ளி வாசலின் தலைவர் சிராஜுதீன் சமாதான புறாவை பறக்க விட்டார். திருப்பூர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான சிறுவர்கள் புத்தாடை அணிந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றனர்.ஊர்வத்தில் பங்கேற்ற சிறுவர்கள் அனைத்து மதத்தினரும் சமத்துவம் பேணவேண்டும்; அமைதி காக்கவேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
மிலாடி கமிட்டி தலைவர் சையது மன்சூர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் சையது முஸ்தபா உட்பட பலர் பங்கேற்றனர்.