/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓட்டை பிரித்து வீட்டில் திருடிய ஆசாமி கைது
/
ஓட்டை பிரித்து வீட்டில் திருடிய ஆசாமி கைது
ADDED : செப் 28, 2025 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்;காங்கேயம் ஊதியூர் அருகே நிழலி கவுண்டம்பாளையத்தை சேர்ந்த விரசாயி பழனிச்சாமி, 70; தனியாக வசித்து வருகிறார். கடந்த, 20ம் தேதி மாலை குண்டடம் பகுதியில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றவர் நேற்று முன்தினம் வந்தார். உள்ளே சென்று பார்த்தபோது மேற்கூரை உடைந்ததிருந்தது.
பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த, 25 ஆயிரம் ரூபாய், முக்கால் பவுன் தங்க நகை திருட்டு போனது தெரிந்தது. அவர் புகாரின்படி ஊதியூர் போலீசார் விசாரித்தனர். இது தொடர்பாக கொழுமங்குலி, தம்புரெட்டிபாளையத்தை சேர்ந்த தங்கசாமி, 42, விவசாய கூலி தொழிலாளியை ஊதியூர் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

