/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குளிர் தாக்கம் குறைவு; தலைதூக்குது வெயில்
/
குளிர் தாக்கம் குறைவு; தலைதூக்குது வெயில்
ADDED : பிப் 09, 2024 12:21 AM
திருப்பூர் : திருப்பூரில், குளிரின் தாக்கம் குறைந்து, வெயில் தலைகாட்ட துவங்கியிருக்கிறது.தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம் மற்றும் இந்திய வானிலைத்துறை, கோவை வேளாண் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில், ''திருப்பூரில், 33 முதல், 34 டிகிரி செல்சியஸ் வரை வெயில் காணப்படுகிறது; இரவு நேர வெப்பநிலை, 21 முதல், 22 டிகிரி செல்சியசாக இருக்கும்.
சராசரியாக காற்றின் வேகம், மணிக்கு, 8 முதல், 14 கி.மீ., வேகத்தில் இருக்கும். வரும் நாட்களில் வறண்ட வானிலையே காணப்படும்; வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்'' என குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த மாதம், மாவட்டத்தில், அதிகபட்சம், 26 முதல், 28 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவியது; குறைந்தபட்ச வெப்பநிலை, 21 முதல், 23 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் மட்டுமே இருந்தது. ஆக, வெயில் துவங்கியுள்ள நிலையில் வெயில் கால பாதிப்பில் இருந்து, மக்கள் தற்காத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

