/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் குப்பையை கொண்டு வந்து கோவையில் கொட்ட திட்டம் ரெடி?
/
திருப்பூர் குப்பையை கொண்டு வந்து கோவையில் கொட்ட திட்டம் ரெடி?
திருப்பூர் குப்பையை கொண்டு வந்து கோவையில் கொட்ட திட்டம் ரெடி?
திருப்பூர் குப்பையை கொண்டு வந்து கோவையில் கொட்ட திட்டம் ரெடி?
ADDED : ஆக 04, 2025 11:49 PM

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பையை, கோவையில் கொட்டும் யோசனைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கோவை தெற்கு மண்டல வளர்ச்சிக்குழு அமைப்பின் தலைவர் மோகன் கூறியதாவது:
கோவை மாநகராட்சியில் சேகரமாகும் கழிவுகள், வெள்ளலுார் குப்பை கிடங்கில் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. முறையான திடக்கழிவு மேலாண்மை திட்டம் இல்லாத காரணத்தால், மாநகராட்சி நிர்வாகம் முறையாக குப்பையை கையாள இயலவில்லை; இதனால் பொதுமக்களுக்கு பிரச்னை.
நகரில் சேகரமாகும் குப்பையை, தெற்கு பகுதியில் கொட்டிவிட்டு, நகரம் சுத்தமாக உள்ளதாக தம்பட்டம் அடிக்கின்றனர். குப்பை கிடங்கு தொடர்பான வழக்கு, கோர்ட்டில் நடந்து வருகிறது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில்கேட்டபோது தான், தவறுகள் வெளியே வந்துள்ளன.
பல கோடி ரூபாயை திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு செலவிடுகின்றனர். அறிவியல் ரீதியான மாற்று ஏற்பாடுகள் செய்யலாம். நடைமுறை சிக்கல் எழாத வகையில், மண்டலம் அல்லது வார்டு வாரியாக குப்பையை பிரித்து கையாளலாம்.
தற்போது, திருப்பூரில் இடமில்லாத காரணத்தால் அங்கு சேகரமாகும் குப்பையை கோவைக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கான திட்டம் தயாராகி விட்டதாகவும், சம்பந்தப்பட்ட அமைச்சர் அதை ஏற்றுக் கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. கோவை மக்கள் இதை ஏற்க மாட்டார்கள். இந்த யோசனையை கைவிட வேண்டும். வெள்ளலுார் குப்பை கிடங்கு பிரச்னையை தீர்க்க கோரி, அடுத்த மாதம் 7ம் தேதி உண்ணாவிரதம் நடத்துகிறோம்.

