/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சின்னவெங்காயத்தில் கூடுதல் மகசூல்; விவசாயிகள் ஆர்வம்
/
சின்னவெங்காயத்தில் கூடுதல் மகசூல்; விவசாயிகள் ஆர்வம்
சின்னவெங்காயத்தில் கூடுதல் மகசூல்; விவசாயிகள் ஆர்வம்
சின்னவெங்காயத்தில் கூடுதல் மகசூல்; விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஏப் 04, 2025 11:01 PM
உடுமலை; சின்னவெங்காய சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற, நோய்த்தடுப்பு பணிகளை உடுமலை வட்டார விவசாயிகள், தீவிரப்படுத்தியுள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில், கிணற்றுப்பாசனத்துக்கு, சின்னவெங்காய சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. தற்போதைய சீசனில், நடவுக்கு விதை பயன்படுத்தாமல் நாற்றுகளை நடவு செய்துள்ளனர்.
சொட்டு நீர் பாசனம், நீரில் கரையும் உரங்கள் என பல தொழில்நுட்பங்களை கூடுதல் மகசூல் பெற பின்பற்றி வருகின்றனர்.
நடப்பாண்டு, வெயிலின் தாக்கம் முன்னதாகவே துவங்கியுள்ளதால், செடிகளின் வளர்ச்சி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது; வளர்ந்த பயிர்களில், இலை கருகல் நோய்த்தாக்குதல் பரவும் வாய்ப்புள்ளது.
எனவே, விவசாயிகள் முன்னெச்சரிக்கையாக, மருந்து தெளித்தல் மற்றும் உரமிடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில்,' சின்னவெங்காய சாகுபடியில், ஏக்கருக்கு, 60 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக செலவாகும். நடப்பு சீசனில், ஏக்கருக்கு, 7 டன் வரை விளைச்சலை எதிர்பார்த்துள்ளோம். வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், நீர் பாசனத்தை அதிகரித்துள்ளோம். தோட்டக்கலைத்துறையினர், நோய்த்தடுப்பு முறைகள் குறித்து வழிகாட்டுதல் வழங்கினால், பயனுள்ளதாக இருக்கும்,' என்றனர்.

