ADDED : ஆக 25, 2025 12:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட இந்திய ஜனநாயக கட்சி சார்பில், கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், பிறந்த நாள் விழா திருப்பூர் பாண்டியன் நகர் பஸ் ஸ்டாப் அருகில் நடந்தது.
மாவட்ட தலைவர் பாரி கணபதி, தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., விஜயகுமார், பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன், முன்னாள் மேயர் விசாலாட்சி, மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கட்சியினர் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினர்.