/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தொகுதிக்குள் தலை காட்டாதவர் தோல்வி அடைவார்'
/
'தொகுதிக்குள் தலை காட்டாதவர் தோல்வி அடைவார்'
ADDED : மார் 24, 2024 01:57 AM
திருப்பூர், ''தொகுதிக்குள் தலைகாட்டாத இ.கம்யூ., வேட்பாளரை மக்களே தோற்கடிப்பார்கள்,'' என, அ.தி.மு.க., மண்டல பொறுப்பாளர் வேலுமணி பேசினார்.
திருப்பூர் லோக்சபா தொகுதி வேட்பாளர் அறிமுகக்கூட்டம், அ.தி.மு.க., மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார். மண்டல பொறுப்பாளர் வேலுமணி, வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது: தி.மு.க., கூட்டணி வேட்பாளருக்கும், நமக்கும்தான் போட்டி; தொகுதி பக்கம் தலைகாட்டாத இ.கம்யூ., வேட்பாளரை மக்களே தோற்கடிப்பார்கள். தி.மு.க., ஆட்சியிலும், மூன்றாண்டுகளாக எதுவும் நடக்கவில்லை. அ.தி.மு.க., திட்டங்களுக்கு பெயர் மட்டும் வைத்துக்கொண்டிருக்கின்றனர்.
நம்மை அடிமை என்று தி.மு.க.,வினர் ஏசினார்கள். தி.மு.க., கூட்டணியில் தான் அனைத்து அடிமைகளும் உள்ளனர். கம்யூ., கட்சி தேர்தலில் கூட்டணி வைப்பார்கள்; தேர்தல் முடிந்ததும் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். இன்று அதெல்லாம் மாறிவிட்டது. தி.மு.க.,வின் அடிமைகளாகவே மாறிவிட்டனர். இவ்வாறு, அவர் பேசினார்.
வேட்பாளர் அருணாசலம் பேசுகையில், ''கடந்த, 2006 முதல் கட்சிப்பணியாற்றி வருகிறேன். மக்கள் பிரதிநிதியாகவும், சேவை செய்திருக்கிறேன். திருப்பூர் எம்.பி.,யாக சென்று, உங்கள் குரலாக, லோக்சபாவில் ஒலிப்பேன். இது, நமக்கு மிகுந்த சோதனையான காலம். நமது ஆட்சி காலத்தில் செய்த சாதனைகளை பட்டியலிட்டு, மக்களின் ஆதரவை பெறுவேன்,'' என்றார்.

