/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூ மார்க்கெட்டை சூழ்ந்த குப்பை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
/
பூ மார்க்கெட்டை சூழ்ந்த குப்பை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
பூ மார்க்கெட்டை சூழ்ந்த குப்பை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
பூ மார்க்கெட்டை சூழ்ந்த குப்பை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 19, 2025 06:53 AM

திருப்பூர்: திருப்பூர் பூ மார்க்கெட் பகுதியில், குப்பை கழிவுகள் தேக்கமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட வியாபாரிகள் மாநகராட்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பூர் மாநகராட்சிக்குச் சொந்தமான, 'ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட பூ மார்க்கெட் வளாகம், ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ளது. இங்கு நுாற்றுக்கும் மேற்பட்ட பூக்கடைகள் உள்ளன.
மார்க்கெட்டுக்கு, பல்லடம், அவிநாசி, காங்கயம், ஊத்துக்குளி உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் ஆயிரக்கணக்கனோர் வந்து செல்கின்றனர். மார்க்கெட் வளாகத்தின் பின்புறத்தில் உள்ள ரோட்டில், மாநகராட்சி பகுதிகளில் சேகரமாகும் குப்பை கழிவுகள் கொண்டு வந்து கொட்டி குவித்து வைக்கப்பட்டுள்ளன.
வளாகத்தின் மிக அருகே, குப்பை மலை போல் தேங்கி அந்த பாதையே முழுமையாக மூடப்பட்டுக் கிடக்கிறது.
பூ மார்க்கெட் அருகாமையில் தேங்கி இருக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது; தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது; மார்க்கெட்டுக்கு வந்து செல்லும் வாகனங்கள் நிறுத்தி லோடு இறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களையும் நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதை முறையாக அகற்றவும், மீண்டும் குப்பை இங்கு கொட்டாத வகையில் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி, மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, பூ வியாபாரிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் சுலைமான் தலைமையில் வியாபாரிகள் அங்கு திரண்டு நேற்று காலை ஆர்ப் பாட்டம் நடத்தினர்.
பூ மார்க்ெகட் அருகே குவிக்கப்பட்டுள்ள குப்பையை அகற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

