/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை வாகனம் மோதியது; மின் கம்பங்கள் முறிந்தன: மின் சப்ளை கடும் பாதிப்பு
/
குப்பை வாகனம் மோதியது; மின் கம்பங்கள் முறிந்தன: மின் சப்ளை கடும் பாதிப்பு
குப்பை வாகனம் மோதியது; மின் கம்பங்கள் முறிந்தன: மின் சப்ளை கடும் பாதிப்பு
குப்பை வாகனம் மோதியது; மின் கம்பங்கள் முறிந்தன: மின் சப்ளை கடும் பாதிப்பு
ADDED : டிச 18, 2025 07:58 AM

திருப்பூர்: அணைப்பாளையம் அருகே, இரவில் குப்பை கொட்ட சென்ற மாநகராட்சி வாகனம் கம்பியில் மோதியதில், மூன்று மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.
திருப்பூர் மாநகரில் தேங்கியுள்ள குப்பைகள், இரவு , பகலாக அகற்றப்பட்டு வருகின்றன. குப்பை கொண்டு சென்ற வாகனம் ஒன்று, அணைப்பாளையம் அருகே கொட்ட சென்றுள்ளது. காலேஜ் ரோடு, அணைப்பாளையம் அருகே, வட்டார போக்குவரத்துத்துறை மைதானத்துக்கு பின்புறம் சென்ற போது, மின்கம்பியில் மோதியது.
இருள்சூழ்ந்த பகுதியில், குப்பை கொட்ட சென்ற டிப்பர் லாரி சென்றுவிட்டு, திரும்பி வரும் போது, குறுக்கே சென்ற மின் கம்பியில் மோதி இழுத்தது. ஒரே நிமிடத்தில், மூன்று மின்கம்பங்கள் முறிந்துவிழுந்தன. மின் வினியோகமும் தடைபட்டது. மின் வாரிய ஊழியர்கள், மின் வினியோகத்தை துண்டித்தனர். காலை, 4:30 மணி முதல் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது; சாமுண்டிபுரம் உதவி மின் பொறியாளர் அலுவலகப் பணியாளர் குழு, களப்பணியில் ஈடுபட்டது; மாலை, 5:30 மணிக்கு சீரமைக்கப்பட்டு, மின் வினியோகம் செய்யப்பட்டது.
அப்பகுதி மக்கள் கூறுகையில்,'குப்பை கொட்ட வந்த டிப்பர் லாரி, குப்பையை கொட்டி விட்டு, மீண்டும் இயல்பு நிலைக்கு வராமல், அப்படியே நகர்ந்து வந்துள்ளது; இதனால், மின் கம்பியில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நல்ல வேளையாக, யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை,' என்றனர்.

