sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குட்டீஸ்களின் தீபாவளி கொண்டாட்டம்

/

குட்டீஸ்களின் தீபாவளி கொண்டாட்டம்

குட்டீஸ்களின் தீபாவளி கொண்டாட்டம்

குட்டீஸ்களின் தீபாவளி கொண்டாட்டம்


UPDATED : அக் 20, 2025 10:49 PM

ADDED : அக் 20, 2025 10:45 PM

Google News

UPDATED : அக் 20, 2025 10:49 PM ADDED : அக் 20, 2025 10:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: தீபாவளியை, திருப்பூரில் பட்டாசு, மத்தாப்பு சகிதம் குட்டீஸ் கொண்டாடினர். அவர்களது முகங்கள் மத்தாப்'பூ'வாய் பிரகாசித்தன.

தீபாவளி கொண்டாடிய குட்டீஸ் சிலர், நம்முடன் சுவாரசியத்துடன் பகிர்ந்தவை:

தன்விதா, விநாயகபுரம், ராயபுரம்: எங்க ஸ்கூல்ல, பட்டாசு வெடிச்சு தீபாவளி கொண்டாடணும்ன்னு டீச்சர் சொன்னாங்க... அதுக்காகவே காத்திருந்தோம். இன்னிக்குத்தான் சரவெடி முதன்முறையா வெடிச்சேன்; என் தம்பி அடுத்த வருஷம் வெடிப்பான்.

சக்திவேலவன், சஷ்டி வேலவன், ஹரிஹரசுதன், மேன்லி: காலேஜ் போறப்ப பட்டாசு வெடிக்கிற ஆசை போயிடும். இப்பவே பட்டாசு வேணும்னு கேட்டோம்; வாங்கி கொடுத்தாங்க. சந்தோஷமா வெடிக்கறோம். 'அணுகுண்டு'தான் அதிகம் வேணும்னு வாங்கி வெடிக்கிறோம்… சும்மா 'டமார் டுமார்'தான்.

பட்டாசு வெடிக்கிறதுக்கே ஒரு பண்டிகை இருப்பது மகிழ்ச்சி தான். ஆனா, பாதுகாப்பா பட்டாசு வெடிக்கணும்ன்னு எங்க பேரண்ட்ஸ் சொல்லுவாங்க.

ஹரிணி - சுமித், மிலிட்டரி காலனி: முதன்முதலா வெடி வைக்கிறேன். திரியை கிள்ளிட்டு தீ வச்சா, வெடிக்கறதுக்குள்ள ஓடி வந்திடலாம். 'ராக்கெட்' வெடி வைக்க சாயந்திரம் ஆகட்டும்ன்னு காத்திருக்கிறோம்.

லோகேஷ் - சாய் ஆதிஷ், ஹரிணிஷ், புதுநகர் காலனி:

வருஷத்துல ஒரு நாள் பட்டாசு வெடிக்கறோம். இருந்தாலும், காற்று மாசுபடும் என்பதால், குறிப்பிட்ட நேரம் வெடிக்கணும்னு சொல்லியிருக்காங்க. அனுமதிச்சிருக்கும் நேரத்தில் மட்டும் பட்டாசு வெடிச்சாலே சந்தோஷம்தான்.

சிவா, ஊத்துக்குளி ரோடு:

பட்டாசு வெடிக்கிறப்ப, பிரண்ட்ேஸாட கூட்டா வெடிக்கணும். யாரோட பட்டாசா இருந்தாலும், ஒருவர் வெடிச்சா, எல்லாத்துக்கும் ஆனந்தம்தான். முதல்ல காதைப் பொத்திக்கிட்டு வேடிக்கை பார்ப்பேன். இப்போ, தனியா வெடிக்க தைரியம் வந்திடுச்சு. இதே மகிழ்ச்சியோட அடுத்த வருஷம் வரைக்கும் காத்திருப்பேன்.

மேலும் குட்டீஸ் பேட்டி பக்கம் - 2

அவிநாசி, குருந்தங்காடு பகுதியில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய குட்டீஸ் நம்மிடம் பகிர்ந்தவை:

அபினா,- 10: ரெண்டு நாள் முன்னாடியே அப்பா பட்டாசு வாங்கி கொடுத்தார்.

அக்காவோட சேர்ந்து வெடிக்கிறேன். சந்தோஷமா இருக்கு. ஒவ்வொரு வருஷமும் தீபாவளி எப்ப வரும்ன்னு அம்மாட்டே கேட்டுக்கிட்டே இருப்பேன். பட்டாசு வெடிக்கிறதுன்னா ஒரே எக்சைட்மென்ட்தான்.

யமுனா,- 13: எண்ணெய் தேய்ச்சு குளிச்சு, புது டிரஸ் போட்டுட்டு பட்டாசு வெடிக்க வந்தாச்சு.

தங்கச்சியுடன் ரெண்டு நாளா பட்டாசு வெடிக்கிறேன். தீபாவளிக்கு அப்பா நிறைய பட்டாசு வாங்கி கொடுத்தாரு.

அம்மா - அப்பா - தங்கச்சியுடன் கோவிலுக்கு சாமி கும்பிட்டு வந்தவுடனே, எனக்கு மிகவும் பிடித்த பிரியாணியை அம்மா செஞ்சு கொடுத்தாங்க.






      Dinamalar
      Follow us