/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'டிஜிட்டல்' அறிவிப்பு பலகைகள் ரயில் நிலையத்தில் நவீனமாகிறது
/
'டிஜிட்டல்' அறிவிப்பு பலகைகள் ரயில் நிலையத்தில் நவீனமாகிறது
'டிஜிட்டல்' அறிவிப்பு பலகைகள் ரயில் நிலையத்தில் நவீனமாகிறது
'டிஜிட்டல்' அறிவிப்பு பலகைகள் ரயில் நிலையத்தில் நவீனமாகிறது
ADDED : ஏப் 18, 2025 06:47 AM

திருப்பூர்; திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் ஐந்து வரிசை 'டிஜிட்டல் டிஸ்பிளே' புதுப்பிக்கும் பணி துவங்கியுள்ளது.
கோவை - ஈரோடு ரயில் வழித்தடத்தில், வழியோர ஸ்டேஷனாக திருப்பூர் உள்ளது. வந்து செல்லும் ரயில்கள், தாமதம், ரயில் ரத்து உள்ளிட்ட தகவல்களை தெரிவிக்க, ரயில்வே ஸ்டேஷனில் ஐந்து வரிசை டிஜிட்டல் அறிவிப்பு பலகை நிறுவப்பட்டிருந்தது.
'அம்ரூத் பாரத்' திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்டேஷனை மேம்படுத்த, 12 கோடி ரூபாயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரயில்வே ஸ்டேஷன் 'டிஜிட்டல் டிஸ்பிளே' நவீனப்படுத்தப்பட்ட வசதிகளுடன் பொருத்த திட்டமிடப் பட்டுள்ளது. இதனால், தற்போதுள்ள டிஸ்பிளே அகற்றப்பட்டு, அவ்விடத்தில் கட்டுமான பணி துவங்கியுள்ளது. ரயில் தாமதம், ரத்து உள்ளிட்ட நடப்பு தகவல்களை ரயில் நிலையத்தில் உள்ள தகவல் மையத்தில் பயணிகள் தெரிந்து கொள்ளலாம். பயணிகள் கனிவான கவனத்துக்கு என குறிப்பிட்டு, இது குறித்த அறிவிப்பும் வைக்கப்பட்டுள்ளது.