/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அணைப்பாளையம் மேம்பாலம் பணி; நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு
/
அணைப்பாளையம் மேம்பாலம் பணி; நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு
அணைப்பாளையம் மேம்பாலம் பணி; நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு
அணைப்பாளையம் மேம்பாலம் பணி; நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு
ADDED : ஜூலை 15, 2025 11:10 PM
திருப்பூர்; நொய்யல் ஆற்றையும், ரயில்வே பாலத்தையும் கடந்து செல்லும் வகையில் மேம்பாலம் சிறுபூலுவபட்டி ரிங் ரோட்டில் கட்டப்பட்டு வருகிறது.
மங்கலம் ரோட்டையும், காலேஜ் ரோட்டையும் இணைக்கும் வகையில், இந்த பாலம் அமைகிறது. பாலம் கடந்த 2006ம் ஆண்டில், 6.5 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்டது. அதன்பின், 2010ல், திருத்திய மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, 19.78 கோடி ரூபாய்க்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டது.
இதற்கான ஒப்பந்தம் ஏற்படுத்தி, நிலமெடுப்பு பணிகள் துவங்கியது. ஆனால், கோர்ட் வழக்கு போன்ற காரணங்களால் தாமதமானது. இப்பிரச்னைகள் முடிவுக்கு வந்து, கடந்த 2020ல் பணி முன்முடிவு செய்து கட்டுமானப் பணி ஒரு வழியாகத் துவங்கியது.
நில மதிப்பு உயர்வு, கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால், இத்திட்ட மதிப்பீடு, 42.76 கோடியாக உயர்ந்தது.
அவ்வகையில் இப்பாலம் தற்போது, 17 துாண் அமைத்து, அவற்றில் தற்போது, 13 ஓடு தள கட்டுமானப் பணியும் நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள, 4 ஓடு தளங்கள் அமைக்கும் பணி தற்போது நடக்கிறது.
இதில், நொய்யல் பகுதியில் 169 மீட்டர் நீளத்தில் தாங்கு சுவர் அமைக்கும் பணியில் 150 மீ., கட்டுமானம் நிறைவடையும் நிலையில் உள்ளது. பாலத்தின் இரு புறங்களிலும் மழை நீர் வடிகால் கட்டும் பணி, 1329 மீ., அளவுக்கு மேற்கொள்ள வேண்டும்.
இப்பணிகளை நேற்று நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் சரவணன், பார்வையிட்டு ஆய்வு செய்தார். கட்டி முடிக்கப்பட்ட துாண்களை நவீன கருவிகள் உதவியுடன் தரம் பரிசோதனை செய்யப்பட்டது.
ஆய்வின் போது, கோவை கோட்ட பொறியாளர் (திட்டங்கள்) சுஜாதா, உதவி கோட்ட பொறியா ளர் கவிதா, ஜெயலட்சுமி, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.