/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரமலான் நோன்பு துவக்கம் கவுன்சிலர் வேண்டுகோள்
/
ரமலான் நோன்பு துவக்கம் கவுன்சிலர் வேண்டுகோள்
ADDED : மார் 09, 2024 08:04 AM
திருப்பூர் : திருப்பூர், மாநகராட்சி 44 வது வார்டு கவுன்சிலர் கண்ணப்பன் மாநகராட்சி மேயரிடம் அளித்த மனு:வரும் 11ம் தேதி முதல் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு துவக்கவுள்ளனர். இதையொட்டி திருப்பூர் பள்ளி வாசல், டூம்லைட் பள்ளி வாசல் மற்றும் கே.என்.பி., பள்ளி வாசல் ஆகியவற்றுக்கு தினமும் தலா ஒரு லாரி லோடு குடிநீர் வழங்க வேண்டும். பெரிய பள்ளி வாசல் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள நிழற்கூரை பகுதியில் உரிய வெளிச்சம் இல்லை. அங்குள்ள தெரு விளக்கு பல்புகளை அகற்றி விட்டு கூடுதல் வெளிச்சம் தரும் விளக்குகள் பொருத்த வேண்டும்.
இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் 44, 45,50 மற்றும் 51 ஆகிய வார்டு பகுதிகளுக்கு குறைந்த பட்சம் 3 நாளுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை செய்ய வேண்டும். பெரிய கடை வீதி பள்ளி வாசலுக்கு நோன்பு நாட்களில் அதிகம் பேர் வந்து செல்வர். பள்ளி வாசல் வீதியில், பேரி கார்டு அமைத்து இரு சக்கர வாகனங்கள் மட்டும் செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

