/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசியலமைப்பு தினம் பள்ளியில் விழிப்புணர்வு
/
அரசியலமைப்பு தினம் பள்ளியில் விழிப்புணர்வு
ADDED : நவ 27, 2025 02:19 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி, சட்ட விழிப்புணர்வு முகாம் திருப்பூர் முருகப்ப செட்டியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
பள்ளி செயலர் சிக்கண்ணன், தலைமை நிர்வாக அலுவலர் பிரேம்குமார், தலைமையாசிரியர் சாந்தி, தமிழாசிரியர் ஜெயந்தி, வக்கீல் அந்தோணி ஷெர்லின், சட்டப்பணிகள் ஆணைக்குழு வக்கீல் சகாதேவன், திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி சந்தோஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
முகாமில், இந்திய அரசியலைப்பின் சிறப்பு, அதன் முகப்புரையின் முக்கியத்துவம், அது வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள், கடமைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. சமூக ஊடகங்களை அதீதமாக பயன்படுத்துவதால் ஏற்பட கூடிய பாதிப்புகள், வாசிப்பு பழக்கத்தை வளர்த்து கொள்ளல் அதனால் ஏற்பட கூடிய பயன்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் முதுநிலை நிர்வாக உதவியாளர் சிராஜூதீன், சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை மைய அலுவலர் கவுதம் உட்பட பலர் பங்கேற்றனர்.

