/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவியருக்கு பாராட்டு
/
திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவியருக்கு பாராட்டு
திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவியருக்கு பாராட்டு
திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவியருக்கு பாராட்டு
ADDED : மார் 15, 2024 08:11 PM

உடுமலை;திறனாய்வுத்தேர்வில் வெற்றி பெற்று, அரசு தகைசால் பள்ளியில் படிப்பதற்கு தகுதி பெற்றுள்ள, உடுமலை வெஞ்சமடை அரசு பள்ளி மாணவியருக்கு, ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்காக, அரசுப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய அளவிலான திறனாய்வுத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, அவர்களின் மேல்நிலை கல்வி நிறைவுபெறும் வரை, அரசின் சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. நடப்பாண்டு நடந்த தேர்வில், உடுமலை வெஞ்சமடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த தனலட்சுமி, இலக்கியா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
இதில் மாணவி தனலட்சுமி மாநில அளவில், 164 வது இடத்திலும், மாவட்ட அளவில் இரண்டாவது இடத்திலும் வெற்றி பெற்றுள்ளார்.
இதன் அடிப்படையில், இந்த மாணவி சென்னையில் உள்ள அரசு தகைசால் மாதிரி பள்ளியில் படிப்பதற்கு தகுதி பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவியருக்கு, பள்ளி தலைமையாசிரியர் அருள் ஜோதி, உதவி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுவினர், பெற்றோர் ஆசிரியர்கழகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.