/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சமுதாய நலக்கூடங்கள் அமைக்க வேண்டும்!
/
சமுதாய நலக்கூடங்கள் அமைக்க வேண்டும்!
ADDED : செப் 26, 2024 05:57 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். ஆதிதிராவிடர் நல அலுவலர் புஷ்பாதேவி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர். ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள், பிரச்னைகள், கோரிக்கைகள் குறித்து பேசினர்.
நலக்குழு உறுப்பினர் மூர்த்தி பேசுகையில், ''திருப்பூர் - வலுப்பூரம்மன் கோவில் வரை இயக்கப்படும் பஸ், வலுப்பூரம்மன் கோவில் வரை சென்று திரும்பி விடுகிறது. மாணவர்கள், தொழிலாளர் நலன் கருதி, இந்த பஸ்ஸை கூடுதலாக இரண்டு கிலோ மீட்டர் துாரத்துக்கு, தாயம்பாளையம் வரை இயக்கவேண்டும்,'' என்றார்.
''ஆதிதிராவிட மக்கள் அதிகம் வசிக்கும் ஊரக, நகர பகுதிகளில், நிகழ்ச்சிகள் நடத்த ஏதுவாக சமுதாய நலக்கூடங்கள் அமைக்கவேண்டும். ஆதிதிராவிடர் காலனிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள கான்கிரீட் ரோடுகளை, 'பேவர் பிளாக்' கற்கள் பதித்து சீரமைத்து தரவேண்டும். அவிநாசியில் பூட்டிவைக்கப்பட்டுள்ள அருந்ததியர் சமூக மடம் அறக்கட்டளை கட்டடத்தை, பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என, நலக்குழு உறுப்பினர்கள் பேசினர்.

