/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சட்டவிரோத செயல்களுக்கு கமிஷனர் கடிவாளம்...! 'அடாவடியை' அடக்கி தொடரும் அதிரடி
/
சட்டவிரோத செயல்களுக்கு கமிஷனர் கடிவாளம்...! 'அடாவடியை' அடக்கி தொடரும் அதிரடி
சட்டவிரோத செயல்களுக்கு கமிஷனர் கடிவாளம்...! 'அடாவடியை' அடக்கி தொடரும் அதிரடி
சட்டவிரோத செயல்களுக்கு கமிஷனர் கடிவாளம்...! 'அடாவடியை' அடக்கி தொடரும் அதிரடி
ADDED : அக் 09, 2024 12:35 AM

திருப்பூர்: திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத செயல்கள் தொடர்பாக போலீஸ் கமிஷனர் அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாநகர போலீஸ் துறையை பொறுத்த வரை குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு ஒரு முறை பலவிதமான அதிகாரிகள் வந்து சென்றுள்ளனர். அதில், ஒரு சிலர் மட்டுமே தங்களின் துணிச்சலான நடவடிக்கை காரணமாக மக்கள் மத்தியில் பெயர் பெற்று விடுகின்றனர்.
அவ்வகையில், கடந்த, இரு மாதம் முன், கமிஷனராக பொறுப்பேற்ற லட்சுமி, இதற்கு முன் பணியாற்றிய இடங்களில் தன்னுடைய அதிரடியான, நேர்மையான நடவடிக்கையால் பலராலும் பாராட்டப்பட்டவர். இவர் பொறுப்பேற்ற பின், நகரில் குற்றங்களை தடுக்கவும், குறைக்கவும் என, ஒவ்வொன்றுக்கும் தனிப்படைகள் அமைத்துள்ளார்.
கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை, லாட்டரி, மது உள்ளிட்ட அனைத்து சட்ட விரோத செயல்களுக்கும் கிடுக்குப்பிடியாக உள்ளதால், இவை அனைத்தும் பெரும்பாலும் கட்டுப்பாட்டில் உள்ளது. இதுதவிர, குடியிருப்புகளில் உள்ள மக்கள் போலீசார் எளிதாக அணுகவும், தங்களின் பிரச்னைகளை தீர்க்கவும் 'டெடிகேட்டடு பீட்' ரோந்து முறையை முறைப்படுத்தி அமல்படுத்தினர்.
குற்றங்களை தடுக்கவும், இளைய சமுதாயத்தினரை நல்வழிப்படுத்தவும், குற்றப்பின்னணி அறிந்து, கவுன்சிலிங் வழங்கவும் 'ஆபரேஷன் ஜீரோ கிரைம்' திட்டத்தை சமீபத்தில் அமல்படுத்தினார். இதுபோன்று ஒவ்வொரு விஷயங்களாக நகரில் கண்காணித்து, குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனாக மாறி, பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து முனைப்போடு பணியாற்றி வருகிறார்.
அதுமட்டுமல்லாமல், போலீசார் பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டாலும், அதிரடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார் இந்த (நர)சிங்கப்பெண் கமிஷனர் லட்சுமி.

