/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூட்டிக்கழித்து கணக்கு போடும் அ.தி.மு.க.,: கூட்டணி பலத்துடன் களமாடும் இ.கம்யூ.,
/
கூட்டிக்கழித்து கணக்கு போடும் அ.தி.மு.க.,: கூட்டணி பலத்துடன் களமாடும் இ.கம்யூ.,
கூட்டிக்கழித்து கணக்கு போடும் அ.தி.மு.க.,: கூட்டணி பலத்துடன் களமாடும் இ.கம்யூ.,
கூட்டிக்கழித்து கணக்கு போடும் அ.தி.மு.க.,: கூட்டணி பலத்துடன் களமாடும் இ.கம்யூ.,
ADDED : மார் 21, 2024 06:51 AM
திருப்பூர் : திருப்பூர் எம்.பி., தொகுதியில், 15.98 லட்சம் வாக்காளர்கள் இருந்தாலும், அதிக வாக்காளர்களை (3.90 லட்சம்) கொண்ட சட்டசபை தொகுதியாக திருப்பூர் வடக்கு உள்ளது.
இத்தொகுதியில் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துபவர் அதிக ஓட்டுக்களை பெற முடியும் என்பதால், வடக்கு தொகுதியில் கட்சியினர் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். இங்கு, 2016 முதல், 2021 வரை நடந்த மூன்று தேர்தலிலும் அ.தி.மு.க.,வே வென்றுள்ளதால், அதே தெம்புடன் அ.தி.மு.க., பிரசாரத்தை துவக்க உள்ளது.
இரு முறை (2011, 2016) போட்டியிட்டு, ஒருமுறை (2021) இ.கம்யூ., கூட்டணிக்கு தொகுதியை விட்டுக்கொடுத்தும், வெற்றி இல்லை என்பதால், கூடுதல் கவனத்துடன் தி.மு.க., பிரசாரம் செய்ய தயாராகி வருகிறது.
மொத்தமுள்ள ஆறு சட்டசபை தொகுதியில் திருப்பூர் வடக்கு இப்படி என்றால், பெருந்துறையில், 1996க்கு பின் இ.கம்யூ., வெற்றி பெறவில்லை. 2006க்கு பின் மூன்று தேர்தல்களில், அ.தி.மு.க., தான் வென்று வருகிறது. பவானியில், 2011, 2016, 2021 மூன்று முறை அ.தி.மு.க., தான். அந்தியூர், 2011, 2016 ல் அ.தி.மு.க., வசமிருந்தது. 2021ல் தி.மு.க., கைப்பற்றியது.
கோபி செட்டிபாளையம், 2006க்கு பின், நான்கு முறையும் அ.தி.மு.க., தான். திருப்பூர் தெற்கில், 2011ல் மா.கம்யூ., 2016ல் அ.தி.மு.க., வென்றது. கடைசியாக நடந்த தேர்தலில் (2021) தி.மு.க., கைப்பற்றியது.
திருப்பூர் எம்.பி., தொகுதிக்கு உட்பட்ட, மொத்தமுள்ள ஆறு சட்டசபை தொகுதியில், அந்தியூர், திருப்பூர் தெற்கு மட்டும் தி.மு.க., விடம் உள்ளது. மற்ற நான்கும் அ.தி.மு.க., வசமுள்ளது.
எனவே, இந்த கணக்கை வைத்து கொண்டு, அ.தி.மு.க.,வினர் தேர்தல் பணிகளில் ஈடுபட தயாராக உள்ளனர். ஆனால், இன்னும் வேட்பாளர் அறிவிக்கவில்லை.
அதேநேரம், ஆளுங்கட்சி என்ற வகையில், தி.மு.க., கூட்டணியில், வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இ.கம்யூ.,. சுப்பராயன், முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்.
ஏற்கனவே, நா.த.க., வேட்பாளர் பிரசாரத்தை துவக்கி விட்டார். பா.ஜ., கூட்டணியில், வேட்பாளர்யார் என்பதும், இன்னும் 'சஸ்பென்ஸ்' ஆகவே உள்ளது.

