/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திட்ட காலம் முடிந்தும் இழுபறியாகும் விரைவுச்சாலை பணி; இணைப்பு ரோடுகளில் அதிகரிக்கும் விபத்துக்கள்
/
திட்ட காலம் முடிந்தும் இழுபறியாகும் விரைவுச்சாலை பணி; இணைப்பு ரோடுகளில் அதிகரிக்கும் விபத்துக்கள்
திட்ட காலம் முடிந்தும் இழுபறியாகும் விரைவுச்சாலை பணி; இணைப்பு ரோடுகளில் அதிகரிக்கும் விபத்துக்கள்
திட்ட காலம் முடிந்தும் இழுபறியாகும் விரைவுச்சாலை பணி; இணைப்பு ரோடுகளில் அதிகரிக்கும் விபத்துக்கள்
UPDATED : ஆக 29, 2025 07:05 AM
ADDED : ஆக 28, 2025 10:56 PM

உடுமலை,; பொள்ளாச்சி - - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை பணியில், பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் திட்ட காலம் முடிந்தும், பணிகள் நிறைவேறாமல் இழுபறியாக வருவதோடு, பிரதான ரோடுகள் இணைப்பு பகுதியில் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
மத்திய அரசின், 'பாரத் மாலா பிரயோஜனா' திட்டத்தின் கீழ், பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி முதல்,-- திண்டுக்கல் கமலாபுரத்தை இணைக்கும் வகையில், நான்கு வழிச்சாலை திட்டம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக, நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி -- மடத்துக்குளம் 50.07 கி.மீ.,; மடத்துக்குளம் - ஒட்டன்சத்திரம் 45.38 கி.மீ.,; ஒட்டன்சத்திரம் -- கமலாபுரம் 36.51 கி.மீ., என, 131.96 கி.மீ., சாலை அமைக்கவும், இதில், 106.693 கி.மீ., (80 சதவீதம்) புறவழிச்சாலையாக அமையும் வகையில் திட்ட வடிவமைப்பு உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், மடத்துக்குளம் முதல் திண்டுக்கல் கமலாபுரம் வரை பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்று, போக்குவரத்திற்கு ரோடு திறக்கப்பட்டு, ஒட்டன்சத்திரம் பகுதியில் சுங்க சாவடி அமைத்து கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
ஆனால், உடுமலை பகுதிகளில், பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. அதிலும், உடுமலையில், திருப்பூர் ரோடு, தாராபுரம் ரோடு, பெதப்பம்பட்டி ரோடு பகுதிகளில் அமைக்கப்படும் பாலம் மற்றும் பாலப்பம்பட்டி இணைப்பு ரோடு பணி என, பல பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
பிரதான ரோடுகளை இணைக்கும் இந்த பகுதியில், மண் ரோடு, ரோட்டோரத்தில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் தோண்டப்பட்ட குழிகள் என, போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை ஏற்படுத்தி வருகிறது.
மடத்துக்குளம் வரை நான்கு வழிச்சாலையில் வரும் வாகனங்கள், மைவாடி, உடுமலை பகுதியில் பாதியில் நிறுத்தப்பட்ட பணிகள் காரணமாக, குறுக்கே வைத்துள்ள கான்கிரீட் சுவர்கள், ரோட்டோர பள்ளங்களில் வாகனங்கள் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
திட்ட பணிகள் நிறைவு பெறும் காலக்கெடு முடிந்து, மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், இன்னும் பணிகள் நிறைவு பெறாமல் இழுபறியாகி வருகிறது.
எனவே, பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளிலும், நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.