/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வாக்கிங்' சென்றவர் பலி :போலீசார் சந்தேகம்
/
'வாக்கிங்' சென்றவர் பலி :போலீசார் சந்தேகம்
ADDED : நவ 27, 2025 02:20 AM
காங்கயம்: காங்கயம், சிவன்மலை கோவிலின் அடிவாரத்தில்கிரிவலப்பாதையில், அப்பகுதியை சேர்ந்த மக்கள் வாக்கிங் செல்வது வழக்கம். அதில், காடையூரை சேர்ந்த கணேஸ்வரன், 60 மற்றும் சுப்ரமணி, 56, பாலசுப்ரமணி, 57 ஆகியோர் வாக்கிங் சென்று வருகின்றனர். நேற்று காலை, வழக்கம் போல் வாக்கிங் சென்ற, மூன்று பேர் மீது அடையாளம் தெரியாத கார் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், சுப்பிரமணிக்கு காலில் காயம் ஏற்பட்டது. கணேஸ்வரன் பலத்த காயமடைந்தார். இருவரையும் மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே கணேஸ்வரன் இறந்தார். சுப்பிரமணி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காங்கயம் போலீசார் 'சிசிடிவி' பதிவுகளை பார்வையிட்டு வருகின்றனர். எதிர்பாராத விதமாக நடந்த விபத்தா அல்லது வேறு ஏதாவதா என்ற கோணத்தில் காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

