/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கண் சிகிச்சை முகாம் 320 பேர் பங்கேற்பு
/
கண் சிகிச்சை முகாம் 320 பேர் பங்கேற்பு
ADDED : டிச 22, 2025 05:12 AM

திருப்பூர்: திருப்பூர் லயன்ஸ் சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் திருப்பூர் குமரன் ரோடு, லயன்ஸ் சங்க வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடந்தது. 785வது மாதாந்திர முகாமில் 320 பேர் கலந்துகொண்டனர்.
அவர்களுக்கு கண்புரை, சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், உடல் எடை போன்ற பரிசோதனைகள் நடந்தது. 54 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்காக அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். நிகழ்வை லயன்ஸ் சங்க தலைவர் சக்திவேல், செயலாளர் ரகுநாதன் மற்றும் அருண்குமார், பொருளாளர் நடராஜ் ஒருங்கிணைத்தனர்.
பல்லடத்தில்... திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, பல்லடம் தாஜூஸ் இஸ்லாம் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல், பல்லடம் லயன்ஸ் சங்கம், ஈகை அறக்கட்டளை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம், பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
நகராட்சி தலைவர் கவிதாமணி துவக்கி வைத்தார். 184 பேர் கண் பரிசோதனை செய்து கொண்டனர். 20 பேருக்கு கண்புரை நோய் சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். 16 பேருக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது. தன்னார்வலர்களுக்கு
விருதுகள், சான்றுகள் வழங்கப்பட்டன.

