/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சக்கர வியூகம்... தப்புவது யார்?
/
சக்கர வியூகம்... தப்புவது யார்?
ADDED : ஏப் 04, 2024 06:03 AM

இந்திய கம்யூ., வேட்பாளர் சுப்பராயனுக்கு முன்பு கட்சிக்கொடி கட்டிய 'டூவீலர்'களும், பின்னால் 'இன்னோவா' கார்களும் அணிவகுக்கின்றன. மக்கள் கவனத்தை ஈர்க்கும் நோக்கில், தி.மு.க., ஏற்பாட்டில், ஆரத்தி மரியாதை, குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது.
திருப்பூர் வீதிகளில், கூட்டம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், சிவப்பு மப்ளர் அணிந்து காட்சியளிக்கும் வேட்பாளர் சுப்பராயன், கும்பிட்ட கரங்களுடன் பிரசார வேனில் செல்கிறார். சுப்பராயனின் பேச்சு, அவருக்கென அமைந்த தனி பாணி. அது தொடர்கிறது. பிரசார பயணம் காலையில் துவங்கினாலும், மதிய வெயிலுக்கு ஏதாவது ஓரிடத்தில் முகாமிடுகின்றனர்.
வேட்பாளர் மற்றும் உடன் செல்பவர்களுக்கான சாப்பாடு, தனி வேனில் வேட்பாளருடன் செல்கிறது. மத்தியில் அமையும் புதிய அரசின் மூலம், ''திருப்பூரின் தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபடுவேன்'' என்றவாறு, ஓட்டு சேகரிக்கிறார்.

