/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தேச நலன் கொண்டவர்களுக்கு வாக்களிக்க வலியுறுத்தல்'
/
'தேச நலன் கொண்டவர்களுக்கு வாக்களிக்க வலியுறுத்தல்'
'தேச நலன் கொண்டவர்களுக்கு வாக்களிக்க வலியுறுத்தல்'
'தேச நலன் கொண்டவர்களுக்கு வாக்களிக்க வலியுறுத்தல்'
ADDED : மார் 30, 2024 12:16 AM
பல்லடம்;''தேச நலன் கொண்டவர்களுக்கு தேர்தலில் ஓட்டு போட வேண்டும்'' என, பல்லடம் அருகே நடந்த ஹிந்து முன்னணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
பல்லடம் காளிவேலம்பட்டி பிரிவு அருகே, ஹிந்து முன்னணி செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் லோகநாதன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் தாமு வெங்கடேஸ்வரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாநில நிர்வாகி சண்முகம் தொண்டர்களுக்கு பயிற்சி வழங்கினார்.
தாமு வெங்கடேஸ்வரன் கூறியதாவது:
நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்களிப்பது கடமை.. அதை யாரும் தவறவிடக்கூடாது. 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஒவ்வொரு பகுதி வாரியாக கூட்டங்கள் நடத்தி அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பல்லடம், சூலுார் சட்டசபை தொகுதிகளில், வீடு தோறும் சென்று பொதுமக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இன்று நமது நாட்டுக்கு எந்தக் கட்சி ஆட்சி நடத்த வேண்டும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். நமது பண்பாடு, கலாச்சாரத்தை பாதுகாக்கும்,
தேச நலனின் அக்கறை கொண்டவர்களை ஆட்சியில் அமர வைக்க வேண்டும். பேசுவது ஒன்று; செய்வது ஒன்று ஆகத்தான் தி.மு.க.,வின் நிலைப்பாடு உள்ளது. மக்களை முட்டாளாக நினைத்து வரும் தி.மு.க., பழைய வாக்குறுதிகளையே மீண்டும் தேர்தல் பிரசாரத்தில் முன் வைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

