/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளஸ் 2 மறு கூட்டல் - மதிப்பீடு விண்ணப்பிக்க இன்றே கடைசி
/
பிளஸ் 2 மறு கூட்டல் - மதிப்பீடு விண்ணப்பிக்க இன்றே கடைசி
பிளஸ் 2 மறு கூட்டல் - மதிப்பீடு விண்ணப்பிக்க இன்றே கடைசி
பிளஸ் 2 மறு கூட்டல் - மதிப்பீடு விண்ணப்பிக்க இன்றே கடைசி
ADDED : மே 31, 2024 11:50 PM
திருப்பூர்;பிளஸ் 2 மறு கூட்டல், மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்க கடைசிநாள். இன்று மாலை, 5:00 மணி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் கேட்டு விண்ணப்பித்தவர்கள், மே, 28 மதியம் முதல் விடைத்தாள்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடுக்கு மே, 29 முதல் ஜூன், 1 வரை, அந்தந்த மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது.
மறுமதிப்பீடு பாடம் ஒன்றுக்கு, 505 ரூபாயும், மறுகூட்டல் உயிரியியல் பாடத்துக்கு மட்டும், 305 ரூபாய், பிற பாடங்களுக்கு (ஒவ்வொன்றுக்கும்), 205 ரூபாய் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மாலை, 5:00 மணியுடன் அவகாசம் முடிவடைய உள்ளது.
மாவட்ட தேர்வுகள் துறை உதவி இயக்குனர் மணிவண்ணிடம் கேட்ட போது, ''மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு இதுவரை, 70 விண்ணப்பங்கள் வந்துள்ளது. நாளை (இன்று) மாலை, 5:00 மணி வரை விண்ணப்பங்கள் கலெக்டர் அலுவலக ஐந்தாவது தளத்தில் உள்ள தேர்வுகள் துறை அலுவலகத்தில் பெறப்படும். மாநில தேர்வுத்துறையின் வழிகாட்டுதல்படி அடுத்த அறிவிப்பு வரும்,'' என்றார்.

