/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரில் வரும், 30, 31ம் தேதி 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி
/
திருப்பூரில் வரும், 30, 31ம் தேதி 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி
திருப்பூரில் வரும், 30, 31ம் தேதி 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி
திருப்பூரில் வரும், 30, 31ம் தேதி 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி
ADDED : மார் 27, 2024 12:07 AM
திருப்பூர்;பிளஸ் 2 தேர்வெழுதி யுள்ள மாணவ, மாணவியருக்கான, உயர்கல்வி ஆலோசனைகள் வழங்குவதற்கான 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி, வரும், 30, 31ம் தேதி, இரு நாட்கள், திருப்பூரில் நடக்கிறது.
கடந்த, 22ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவடைந்தது. தேர்வை முடித்து, ரிசல்ட்டுக்கு காத்திருக்கும் மாணவருக்கும், பெற்றோருக்கும் ஒரே கேள்வியாக முன்நிற்பது,' அடுத்த என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், என்ன படிப்பு வாழ்வை சிறப்பாக்கும்,' என்பது தான்.
இதற்கு தீர்வு சொல்லவும், கேள்விகளுக்கும், குழப்பங்களுக்கும் வழிகாட்டவும், 'தினமலர்' சார்பில் வழிகாட்டி நிகழ்ச்சி, திருப்பூர், தாராபுரம் ரோடு, வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் மார்ச், 30 மற்றும், 31ம் தேதி நடக்கிறது.
'தினமலர்' நாளிதழுடன், கோவை, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமங்கள் இணைந்து வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்துகிறது. கண்காட்சி மற்றும் கருத்தரங்கு என இரு பிரிவுகளாக நிகழ்ச்சி நடக்கிறது. 70க்கும் மேற்பட்ட கல்லுாரிகளின் அரங்குகள், முன்னணி பல்கலை கழங்கள் உட்பட, 70 க்கு மேற்பட்ட நிறுவன ஸ்டால்கள், ஒரே கூரையின் கீழ் அமையவுள்ளன. காலை, மாலை இரு பிரிவுகளாக பல்வேறு தலைப்புகளில், துறை சார்ந்த வல்லுநர்கள் மாணவ, மாணவியருக்கு விளக்கமளிக்க உள்ளனர்.
மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ் ஆக்மென்டட் ரியாலிட்டி சோஷியல் மீடியா டிஜிட்டல் மார்க்கெட்டிங், பிக்டேட்டா, ரோபாட்டிக்ஸ், சட்டம், அறிவியல், கலை உட்பட ஏராளமான பிரிவுகள், படிப்புகள் குறித்து விளக்கமளிக்கின்றனர். நிகழ்வில் பங்கேற்கும் மாணவர்கள், பெற்றோர் துறை சார்ந்த நிபுணர்கள், பேராசிரியர்களுடன் ஆலோசிக்கலாம்.
பரிசுகளும்காத்திருக்கு...
வழிகாட்டி நிகழ்ச்சியில், வேலை வாய்ப்பை எளிதாக்கும் 'டாப்' துறைகள், படிக்கும் போதே வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள், புத்தம் புதுபடிப்புகள், அரசு வேலை வாய்ப்புகள், நீட் தேர்வு குறித்து பிரத்யேக விளக்கம், கல்வி உதவித்தொகை, கவுன்சிலிங் நடைமுறை, கட் ஆப் வாய்ப்பு உள்ளிட்டவைக்கும், சந்தேகங்களுக்கும் விளக்கம் பெறலாம். கல்லுாரி அரங்குகளில், விண்ணப்ப செயல்பாடுகள், கட்டணம் உள்ளிட்ட விவரங்களை கேட்டறியலாம்.
வழிகாட்டி நிகழ்ச்சி, கருத்தரங்கில் மாணவர்களுக்கு கேட்கப்படும் எளிய கேள்விகளுக்கு விடையளித்து, லேப்டாப், டேப்லெட், வாட்ச் போன்ற பரிசுகளையும் தட்டி செல்லலாம்.
இரண்டு நாட்களும் காலை, 10:00 மணி முதல் மாலை, 6:30 மணி வரை நடக்கிறது. நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புபவர்கள், www.kalvimalar.com என்ற இணையதளத்திலோ அல்லது 91505 74442 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலோ, ஹாய் என மெசேஜ் கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க, அனுமதி இலவசம்.
இணைந்து வழங்குவோர்
வழிகாட்டி நிகழ்ச்சியை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனம், அமிர்த விஷ்வ வித்யா பீடம் முக்கிய பங்களிப்பாளர்களாகவும், ஸ்ரீ சக்தி பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி இணை ஸ்பான்சர்களாக, கற்பகம் கல்வி நிறுவனம், கே.எம்.சி.எச்., சேரன் கல்வி குழுமம், ராஜலட்சுமி தொழில்நுட்ப கல்லுாரிகள் ஸ்பான்சர்களாக பங்கேற்க உள்ளனர்.

