ADDED : ஏப் 22, 2024 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
- நமது நிருபர் -
சித்ரா பவுர்ணமி விழாவுக்கு திருவண்ணாமலைக்கு திருப்பூரிலிருந்து சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.
சித்திரை மாதத்தில் வரும் முதல் பவுர்ணமி, சித்ராபவுர்ணமி. 12 மாதங்களில் வரும் பவுர்ணமியை விட, சித்திரை மாதம் பவுர்ணமி சிறப்பானதாக கருதப்படுவதால், அன்று கிரிவலம் செல்ல பக்தர்கள் பலரும் சிவாலயங்களுக்கு பயணிக்கின்றனர்.
அவ்வகையில், திருப்பூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் பக்தர்களுக்காக, நேற்றும், இன்றும் தலா, 25 சிறப்பு பஸ் வீதம், 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
சிறப்பு பஸ்கள் பெருந்துறை, பவானி, சேலம் வழியாக பயணிக்கும். பயணி ஒருவருக்கு கட்டணம், 255 ரூபாய், ஏ.சி., பஸ்களாக இருப்பின் கட்டணம், 295 ரூபாய்.

