/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
2 பேர் நேற்று வேட்புமனு தாக்கல்
/
2 பேர் நேற்று வேட்புமனு தாக்கல்
ADDED : மார் 27, 2024 04:06 PM
திருப்பூர்: திருப்பூர் லோக்சபா தொகுதியில் நேற்று, வேட்பாளர் இரண்டுபேர் மனுதாக்கல் செய்தனர்.
லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், கடந்த, 20ம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. திருப்பூர் தொகுதிக்கான வேட்புமனுக்கள், கலெக்டர் அலுவலகம் மற்றும் சப்-கலெக்டர் அலுவலகங்களில் பெறப்பட்டு வருகிறது.
கடந்த, 22ம் தேதி, நான்கு சுயேச்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். நேற்றுமுன்தினம், அ.தி.மு.க., - இ.கம்யூ., - பா.ஜ., - நாம்தமிழர், பகுஜன்சமாஜ் கட்சியினர், சுயேச்சைகள், மாற்று வேட்பாளர் என, ஒன்பது பேர் மனுதாக்கல் செய்தனர்.
அ.தி.மு.க., வேட்பாளர் அருணாசலம், நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்தார். நேற்று மீண்டும், கூடுதலாக ஒரு மனுவை தாக்கல் செய்தார். ராஷ்ட்ரிய சமாஜ் பக் ஷா சார்பில், மலர்விழி, 49, வேட்பு மனுதாக்கல் செய்தார்.
பவானி சட்டசபை தொகுதியைச் சேர்ந்த ஜெனார்த்தனன், 49; ஓவியர். இவர், தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி சார்பில் நேற்று மனுதாக்கல் செய்தார். திருப்பூர் தொகுதியில் இதுவரை, 15 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனு தாக்கல் இன்று மதியம், 3:00 மணியுடன் முடிவடைகிறது. வேட்புமனு படிவங்கள் வாங்கிச் சென்றுள்ளதால், சுயேச்சை வேட்பாளர் பலர் மனு தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்புமனுக்கள், நாளை பரிசீலனை செய்யப்படுகின்றன.

