/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புத்தாண்டு தினத்தில் மரங்களுக்கு புத்துயிர்
/
புத்தாண்டு தினத்தில் மரங்களுக்கு புத்துயிர்
ADDED : ஏப் 15, 2024 12:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்:சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட காளிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: இப்பகுதியில், 'போகர் வனம்' என்ற பெயரில், 12 ஏக்கரில் தாவரவியல் பூங்கா அமைத்துள்ளோம். அருகிலுள்ள இச்சிப்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள பொது இடத்தில் இருந்த இரண்டு ஆல மரங்களின் கிளைகளை மின் வாரியத்தினர் வெட்டி அகற்றினர்.
இரண்டு ஆல மரங்களும் கிளைகளை இழந்து மொட்டையாகின. இயந்திர உதவியுடன் மரங்களை வேருடன் பெயர்த்து எடுத்து, போகர் வனத்தில் நட்டு வைத்தோம். தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் இரண்டு மரங்களுக்கும் புத்துயிர் கிடைத்தது.

