/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழாய் பதிக்கும் பணி: கமிஷனர் ஆய்வு
/
குழாய் பதிக்கும் பணி: கமிஷனர் ஆய்வு
ADDED : மே 14, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;'அம்ரூத்' திட்டத்தில், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடக்கிறது. இதில், மத்திய பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா முதல், தெற்கு போலீஸ் ஸ்டேஷன் வரை கடந்த, 11ம் தேதி இரவு முதல் இப்பணி நடந்து வருகிறது.
இரு நாளாக நடந்து வரும் குழாய் பதிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்பணிகளை மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். தலைமை பொறியாளர் திருமாவளவன், மாநகர பொறியாளர் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

