/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'எங்களுடையது கள்ள கூட்டணி அல்ல: நல்ல கூட்டணி' பா.ஜ., பணிமனை திறப்பு விழாவில், 'மாஜி' மேயர் பேச்சு
/
'எங்களுடையது கள்ள கூட்டணி அல்ல: நல்ல கூட்டணி' பா.ஜ., பணிமனை திறப்பு விழாவில், 'மாஜி' மேயர் பேச்சு
'எங்களுடையது கள்ள கூட்டணி அல்ல: நல்ல கூட்டணி' பா.ஜ., பணிமனை திறப்பு விழாவில், 'மாஜி' மேயர் பேச்சு
'எங்களுடையது கள்ள கூட்டணி அல்ல: நல்ல கூட்டணி' பா.ஜ., பணிமனை திறப்பு விழாவில், 'மாஜி' மேயர் பேச்சு
ADDED : மார் 28, 2024 04:29 AM

திருப்பூர், : தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், தேர்தல் பணிமனை திறப்பு விழா திருப்பூர், பி.என்., ரோடு, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று திறக்கப்பட்டது.
விழாவில், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் விசாலாட்சி பேசியதாவது:
கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது போல, கடந்த, 1996 முதல் அரசியல் பயணத்தை துவங்கி, மேற்கு வங்கம், குஜராத் என, வட மாநிலங்களில் எல்லாம் தன் முத்திரையை பதித்தவர், திருப்பூர் வேட்பாளர் முருகானந்தம்.
கடந்த, ஆறு மாதம் முன், ஐரோப்பா நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றேன். அப்போது, லண்டனில் தங்கியுள்ள எனது மகளை பார்க்க சென்றேன். வெளிநாட்டு உணவுகளை சாப்பிட்டு சலிப்பு ஏற்பட்டது. சிறிய ஊரில் உள்ள இந்தியன் ஓட்டல் ஒன்றை தேடி பிடித்து, நமது உணவை சாப்பிட சென்றேன்.
அங்கிருந்த ஓட்டலில், பிரதமர் மோடியின் போட்டோ இருந்தது. ஆச்சரியத்துடன் கடைக்காரரிடம் கேட்டேன்.
அதற்கு, அடுத்தடுத்து மோடி தான் நாட்டை ஆளுவார்,' என்று கூறினார். பல ஆயிரம் கிலோ மீட்டர் துாரத்தில் இருப்பவர் சொல்லுகிறார்.
ஒரு புறத்தில், முதல்வர் ஸ்டாலின் சொல்லுகிறார். பா.ஜ., வும், அ.தி.மு.க., வும் கள்ள கூட்டணி என்று, இன்னொரு புறம், பழனிசாமி சொல்லுகிறார், பா.ஜ., வும், தி.மு.க., வும் கள்ள கூட்டணி என்று.
யார் எந்த கள்ள கூட்டணியை போட்டாலும், இங்கே நாம் அமைத்து இருப்பது நல்ல கூட்டணி.
விளக்கத்தை விட்டு விடுங்கள். இலக்கை நோக்கி ஓடுங்கள். கட்சி நிர்வாகிகள் சொந்த வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு, மோடியின் திட்டம் குறித்து தெரிவித்து, திரும்ப திரும்ப மக்களை சந்தியுங்கள்.
தாமரை சின்னமும், வேட்பாளரின் முகமும் தான், வரும், 19ம் தேதி தெரிய வேண்டும். ஓட்டுச்சாவடி முன் நின்றால், தாமரையை தவிர, வேறு எந்த சின்னமும் தெரிய கூடாது என்று இலக்காக வைத்து களப்பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

